செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை எதிர்க்கட்சி தலைவரை சந்தித்த ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள்!

எதிர்க்கட்சி தலைவரை சந்தித்த ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள்!

0 minutes read

ஐரோப்பிய நாடாளுமன்ற ஆறு பேர் கொண்ட குழுவினர் இன்று எதிர்க்கட்சி தலைவரை சந்தித்து கலந்துரையாடியுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இந்த சந்திப்பு இன்று 05.04.2018 நாடாளுமன்றத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சி தலைவரின் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளதாக அந்த கட்சி வௌியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்போது கருத்து தெரிவித்த சம்பந்தன், முன்னைய அரசாங்கமானது ஜனநாயக பண்புகளிலிருந்து விலகியதன் காரணமாவே தற்போதைய அரசாங்கமானது பதவிக்கு வந்துள்ளது என்றும், இந்த அரசாங்கத்தின் சிந்தனையும் நடவடிக்கைகளும் முன்னைய அரசாங்கத்தின் நடவடிக்கைகளோடு ஒப்பிடுகையில் சாதகமாக இருந்தாலும் கருமங்கள் மிக மந்தகதியிலேயே இடம்பெறுவதாக தெரிவித்தார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.