
வவுனியா விசேட அதிரடி படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், வவுனியா விசேட அதிரடிப்படை அதிகாரி எஸ்.பி.சில்வெஸ்டர் மற்றும் முல்லைத்தீவு உதவி பொலிஸ் பொறுப்பதிகாரி சி.ஐ.ஆனந்த தலைமையில் முல்லைதீவு விசேட அதிரடிப்படையினரும் இணைந்து முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் இந்த அகழ்வு நடவடிக்கையை மேற்கொண்டு ஆயுதங்களை மீட்டுள்ளனர்.
தமிழீழ விடுதலைப் புலிகளால் புதைத்து வைக்கப்பட்ட நான்கு தண்ணீர் தாங்கிகளில் வைக்கப்பட்டு புதைக்கப்பட்ட நிலையில் மைகிறோ பிஸ்டல் ரவைகள் 3000, கைகுண்டுகள் 34, கைக்குண்டு 22, மிதிவெடிகள் 48, ஆர்.பி.ஜி எறிகணைகள் 7, ஜி.பி.எம்.ஜி ரவைகள் 2000, விமான எதிர்ப்பு ரவைகள் 1710, டேகிணற்றோர்கள் 06, கிளைமோர் 04, விடுதலைப் புலிகளின் தயாரிப்பான அருள் எறிகணைகள் 34, சி 4 வெடிமருந்து 48kg என்பன மீட்கப்பட்டு பாதுகாப்பாக அழிப்பதற்காக விசேட அதிரடிப்படையினரால் எடுத்து செல்லப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.