செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை இன்று முதல் யாழில் பிரமாண்டமான புத்தகக் கண்காட்சி

இன்று முதல் யாழில் பிரமாண்டமான புத்தகக் கண்காட்சி

1 minutes read

யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் மிக பிரமாண்டமாய் யாழ் புத்தகக் கண்காட்சி இன்று முதல் ஆரம்பமாகவுள்ளது. யாழில் முதன்முறை மிகப்பிரமாண்டமாய் ஆரம்பமாகவுள்ள இந்த புத்தகக்கண்காட்சி எதிர்வரும் செப்டம்பர் 1ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

வட மாகாண சபையின் ஏற்பாட்டில் இலங்கை புத்தக விற்பனையாளர்கள் ,இறக்குமதியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் ‘யாழ் புத்தகத் திருவிழா 2019’ ஆளுநர் தலைமையில் யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் இன்று (27) ஆரம்பமாகியுள்ளது.

இப் புத்தக திருவிழா நிகழ்வை யாழ் மாநகர சபை முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தார்.

30 தொகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ள குறித்த புத்தக கண்காட்சி மண்டபத்தின் ஒவ்வொரு பிரிவிலும் பாடசாலை மாணவர்களுக்கான புத்தகங்கள், சிறுவர் கதைகள் , வழிகாட்டி நூல்கள் , ஈழத்துப் படைப்புக்கள் உள்ளிட்ட உள்ளுர் மற்றும் இந்திய மூத்த எழுத்தாளர்களின் புத்தகங்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன் ஆரம்ப நிகழ்வில் யாழ் ஆயர், வடக்கு மாகாண அரச அதிகாரிகள் , புத்தக நிறுவனங்களின் உரிமையாளர்கள், இராணுவ அதிகாரிகள், பொது மக்கள், பாடசாலை மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர் .

இந் நிகழ்வில் உரையாற்றிய மாநகர முதல்வர் ஆர்னோல்ட் புத்தக திருவிழாவை ஆரம்பித்து வைப்பது மகிழ்ச்சி என்றும், இவ்வாறான நிகழ்வுகள் எமது மக்களுக்கு ஒரு வரப்பிரசாதம் என்றும் குறிப்பிட்டார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.