
இன்று (சனிக்கிழமை) காலை,முல்லைத்தீவிலிருந்து மல்லாவி பகுதியை நோக்கிச்சென்று கொண்டிருந்த கடற்படையினரின் வாகனத்துடன் கணவன் மனைவி ஆகிய இருவரும் பயணித்த மோட்டார் சைக்கிள் மோதியதிலே ஒருவர் உயிரிழந்ததோடு மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார்.
இதன்போது, கணவர் உயிரிழந்ததுடன் மனைவி படுகாயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்தவர் தனியார் நிறுவனம் ஒன்றில் கடமையாற்றி வரும் மல்லாவி, துணுக்காய், ஒட்டங்குளம் பகுதியைச் சேர்ந்த அமிர்தலிங்கம் கேஜீவன் (28வயது) என பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவரின் சடலம் முல்லைத்தீவு வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.