செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை “ரமழானில் தவிக்கும் குடும்பங்களைத் தத்தெடுப்போம்”:அம்பாறையில் 15000 வழங்கும் புதிய திட்டம்.

“ரமழானில் தவிக்கும் குடும்பங்களைத் தத்தெடுப்போம்”:அம்பாறையில் 15000 வழங்கும் புதிய திட்டம்.

1 minutes read

முஸ்லிங்களின் புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு கல்முனை பிரபல சமூக சேவையாளரும் பிரசித்தி பெற்ற உயிரியல் பாட ஆசிரியருமான றிசாத் ஷரீப் அவர்களினால் அம்பாறை மாவட்டத்தில் புதிய திட்டமொன்று அறிமுகம் செய்யப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

உள்நாட்டிலும்,வெளிநாட்டிலும் தொழில் புரியும் நண்பர்களினதும், பிரதேச தனவந்தர்களினதும் உதவியுடன் முன்னெடுத்துவரும் இவ்வுதவித்திட்டமானது “ரமழானில் தவிக்கும் குடும்பங்களைத் தத்தெடுப்போம்” எனும் செயற்றிட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

சம்மாந்துறை, மாளிகைக்காடு, சாய்ந்தமருது, நாவிதன்வெளி போன்ற அம்பாறை மாவட்ட தெரிவுசெய்யப்பட்ட குடும்பங்களை நோன்பை முன்னிட்டு தத்தெடுத்து இதுவரை பலகுடும்பங்களுக்கு இவ்வுதவி செய்யப்பட்டுள்ளது.முகப்புத்தக நண்பர்கள், சமூக நல அமைப்புக்களை கொண்டு மேற்படி உதவிகள் பயனாளிகளை சென்றடைகிறது. ஒரு நாளைக்கு 500 ரூபாய் விதம் நோன்பு நோற்கும் 30 நாட்களுக்கும் 15000 ரூபாய் இத்திட்டத்தின் ஊடாக ஒரு குடும்பத்தை சென்றடைகிறது.

மேலும் பலரதும் நேரடி கண்காணிப்பில் நடைபெற்றுவரும் “ரமழானில் தவிக்கும் குடும்பங்களைத் தத்தெடுப்போம்” எனும் செயற்றிட்டம் அம்பாறை மாவட்டத்தின் சகல பிரதேசங்களுக்கும் விஸ்தரிப்பு செய்யப்பட்டு ஏழைகளுக்கு தம்மால் முடியுமான உதவிங்களை வழங்க தயாராக இருப்பதாக றிசாத் ஷரீப் நம்பிக்கை தெரிவித்தார்.
-வணக்கம் லண்டனுக்காக நூருல் ஹுதா உமர்-

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.