மஹிந்தானந்த அளுத்கமகே கிரிக்கெட் வீரர்களை களங்கப்படுத்தி அரசியல் செய்வது மிகவும் வருந்தத்தக்க விடயமாக இருக்கின்றது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் வி.ஜனகன் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (19) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும்,‘இலங்கையை உலகளவில் புகழ் சேர்த்த கிரிக்கெட் விளையாட்டு வீரர்களை களங்கப்படுத்தும் வகையில் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த மஹிந்தானந்த அளுத்கமகே கருத்துத் தெரிவித்துள்ளார்.
பொதுவாக மஹிந்தானந்த அளுத்கமகே இவ்வாறான கருத்துக்களை வௌியிடுவதில் சிறந்த வீரர் என்று கூற முடியும். எனவே, எங்களுடைய கிரிக்கட் வீரர்களை களங்கப்படுத்தி பேசி அரசியல் செய்வது மிகவும் வருந்தத்தக்க விடயமாக இருக்கின்றது’.