வெளிநாட்டு பணிப்பெண்கள் வீடுகளிற்கு திரும்பினர்.

வெளிநாட்டில் இருந்து அழைத்து வரப்பட்ட இயக்கச்சி படைமுகாம் தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்து 71 பெண்கள் தமது வீடுகளிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

வெளிநாட்டில் பணிப் பெண்களாக கடமையாற்றிய பெண்கள் கடந்த 27 ஆம் திகதி நாட்டிற்கு அழைத்து வரப்பட்டிருந்தனர்.

இவ்வாறு அழைத்து வரப்பட்டவர்கள் இயக்கச்சி 55 வது படைப்பிரிவில் உள்ள தனிமைப்படுத்தல் நிலையத்தில் கடந்த 14 நாட்கள் தனிமைப்படுத்தளுக்குள் உட்படுத்தப்பட்டு, இன்று (11) காலை வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இவர்களை யாழ்.மாவட்ட கட்டளைத்தளபதி ரூவான் வணிகசூரிய இவர்களுக்கான மருத்துவ சான்றிதழ் வழங்கி அனுப்பி வைத்தார்.

ஆசிரியர்