யாழ்.போதனா வைத்தியாலை ஊழியர்கள் 4 பேர் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்

யாழ்.போதனா வைத்தியாலையில் கடந்த 25ம் திகதி 2வது தடவையாக அனுமதிக்கப்பட்டு 7ம் விடுதியில் தனிமைப்படுத்தல் அறையில் வைக்கப்பட்டிருந்தவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது.

எனினும் அவருக்கு குறைந்தளவு தொற்றே ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில் அவருடன் பழகிய வைத்தியசாலை ஊழியர்கள் 4 பேர் அடையாளம் காணப்பட்டு அவர்களுடைய வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு 31ம் திகதி பரிசோதனை நடத்தப்படும்.

மேற்கண்டவாறு யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி கூறியிருக்கின்றார்.

ஆசிரியர்