பூகொடை நகரத்தில் உள்ள ஆடை விற்பனை நிலையமொன்றில் இருந்து கொள்ளையடித்துச் சென்ற நபர்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
எவ்வாறாயினும், துப்பாக்கி சூட்டுக்கு மத்தியில் கொள்ளையர்கள் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நவகமுவ பகுதியில் இடம்பெற்ற குற்றச் செயல்களுடன் தொடர்புடைய மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சந்தேக நபர்களிடம் இருந்து 5 வாள்கள், 2 கையெறி குண்டுகள், மன்னா கத்தி ஒன்றும் 3 கிராம் ஹெரோயின் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
