Monday, March 1, 2021

இதையும் படிங்க

தடுப்பூசி போட்ட பின்னர் காய்ச்சல் வந்தால் அச்சமடைய வேண்டுமா? | மருத்துவர் கேசவன் செவ்வி

 நேர்கண்டவர் - ரொபட் அன்டனி  - 1. எந்தவொரு தடுப்பூசி போட்டாலும் காய்ச்சல் உடம்பு வலி வருவது சாதாரணமானது  2. நம்பிக்கையுடன்...

ஜான்சன் மற்றும் ஜான்சன் நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசியை அவசர தேவைக்கு பயன்படுத்த அமெரிக்கா அனுமதி..!

வாஷிங்டன்: ஜான்சன் மற்றும் ஜான்சன் நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசியை அவசர தேவைக்கு பயன்படுத்த அமெரிக்கா அனுமதி அளித்துள்ளது. கொரோனாவுக்கு எதிராக ஒற்றை டோஸ் தடுப்பூசியை உருவாக்கி உள்னனர்.

துணை இராணுவப் படை தமிழகம் வருகை!

தமிழகத்தில், தேர்தல் பாதுகாப்பு பணிக்காக 1300 துணை இராணுவ படையினர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தடைந்தனர். தமிழகம் உட்பட 5 மாநிலங்களின் சட்டமன்ற தேர்தலுக்கான...

பாமக இடம்பெறும் கூட்டணியில் தேமுதிக இடம்பெறாதா?

கூட்டணி குறித்து விரைவில் நல்லசெய்தி வரும் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தேமுதிக சார்பில் மாவட்ட...

தடுப்பூசிக்காக மூத்த குடிமக்கள் தற்போது இணையத்தில் விண்ணப்பிக்கலாம்!

கொரோனா தடுப்பூசியை இணையத்தில் விண்ணப்பிக்க வழிகாட்டு நெறிமுறைகளை மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய சுகாதார அமைச்சகம் அனுப்பிவைத்துள்ளது. மத்திய அரசின் சுகாதார அமைச்சகத்தின் இணையதளமான கோ-வின்...

ஆயிரம் ரூபாய் சம்பள விவகாரம் – சம்பள நிர்ணயசபை நாளை மீண்டும் கூடுகிறது!

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் ஆயிரம் ரூபாய் சம்பள அதிகரிப்பு தொடர்பாக சம்பள நிர்ணயசபை நாளை (திங்கட்கிழமை) மீண்டும் கூடி பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவுள்ளது. தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளமாக...

ஆசிரியர்

முன்னாள் போராளிகளுக்கு அழைப்பு | அடைக்கலநாதன் எம்.பி.

அரசாங்கம் திட்டமிட்டு முன்னாள் போராளிகளை அச்சத்திற்கு உள்ளாக்கி அவர்களை எந்த ஒரு நடவடிக்கைகளிலும் ஈடுபடாத வகையில் வைத்திருப்பதற்கான நிலையை ஏற்படுத்துகின்றனர்.அந்த விடையத்திற்கு ஒரு போதும் நாங்கள் இடம் கொடுக்க முடியாது.

எனவே அனைத்து முன்னாள் போராளிகளும் ஒன்றினைந்து தனித்துவத்தோடு,நீங்கள் எங்களுடன் இணைய வேண்டும் என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,டெலோ இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

-அவர் ஊடகம் ஒன்றிற்கு இன்று செவ்வாய்க்கிழமை(18) கருத்து தெரிவிக்கும் போதே அவர் அவ்வாறு தெரிவித்தார்.
-அவர் மேலும் தெரிவிக்கையில்,,,

வெளி நாடுகளில் விடுதலைப்புலிகள் மீண்டும் வருவதற்கான முயற்சிகள் இடம் பெற்று வருவதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் குற்றச்சாட்டினை முன் வைத்துள்ளார்.

அதன் பிண்ணனியில் இங்கு இருக்கின்ற முன்னாள் போராளிகளை விசாரனை செய்கின்ற வகையில் புலனாய்வுத்துறையினர் விசாரனை என்ற போர்வையில் முன்னாள் போராளிகளின் விபரங்களை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த சம்பவம் கண்டிக்கத்தக்க விடையம்.

முன்னாள் போபராளிகளை மீண்டும் மீண்டும் துன்பப்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது.முன்னாள் போராளிகளுக்கு ஒரு செய்தியை கூற விரும்புகின்றேன்.

நீங்கள் அச்சப்பட தேவையில்லை.நாங்கள் உங்களுக்காக குரல் கொடுப்போம். அந்த வகையில் நீங்கள் அரசியல் நீரோட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும்.தமிழ் தேசியக் கூட்டமைப்போடு இணைந்து செயல்பட வேண்டும்.

நாங்கள் உங்களை இணைத்துக் கொள்ள தயாராக இருக்கின்றோம்.எனவே குறித்த பிரச்சினைகளுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமாக இருந்தால்,அரசாங்கம் திட்டமிட்டு எமது போராளிகளை அச்சத்திற்கு உள்ளாக்கி அவர்களை எந்த ஒரு நடவடிக்கைகளிலும் ஈடுபடாத வகையில் வைத்திருப்பதற்கான நிலையை ஏற்படுத்துகின்றனர்.

அந்த விடையத்திற்கு ஒரு போதும் நாங்கள் இடம் கொடுக்க முடியாது.எனவே அனைத்து முன்னாள் போராளிகளும் ஒன்றினைந்து தனித்துவத்தோடு,நீங்கள் எங்களுடன் இணைய வேண்டும்.

கூட்டமைப்பில் உள்ள எந்தக் கட்கிளுடனும் இணைந்து கொள்ளுவதை தவிர்த்து நீங்கள் தனித்துவமான விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளிகள் என வருகின்ற போது அது இன்னும் வலுவடையக் கூடிய வாய்ப்பு உள்ளது.

எனவே பிரச்சினைகளை நாங்கள் கையாள வேண்டுமாக இருந்தால் பிரிந்து இருக்காமல் ஒற்றுமையாக ஒன்று கூடி எங்களுடன் வந்து இணைந்து கொள்ள வேண்டும்.

எங்களுக்கு பிரச்சினைகள் ஏற்படுகின்ற போது உங்களுடன் நாங்கள் இருப்போம்.உங்களுக்காக குரல் கொடுப்போம்.

முன்னாள் போராளிகளை தொடர்ந்தும் அச்சத்திற்கு உள்ளாக்கும் நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுக்க முடியாது.என தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,,,

பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ அவர்களுக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்ப உள்ளேன்.

வீடமைப்பு திட்டத்திற்கு அமைச்சராக உள்ள காரணத்தினால் குறித்த கடிதத்தை அனுப்பவுள்ளேன்.

கடந்த அரசாங்கத்தில் சஜித் பிரேமதாச வீடமைப்புத்துறை அமைச்சராக இருந்த போது மக்களுக்கு வழங்கப்பட்ட வீட்டுத்திட்டத்தில் பல பயனாளிகள் மற்றும் பொது மக்கள் பாதீக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு வீட்டுத்திட்டத்தை ஆரம்பிக்கின்ற போது 50 ஆயிரம் ரூபாய் முதல் ஒரு இலட்சம் ரூபாய் வரை மட்டுமே வீட்டு நிர்மானத்திற்கு நிதி வழங்கப்பட்டது.

குறித்த வீட்டுத்திட்ட பணிகள் முன்னெடுக்கப்பட்ட போது வீட்டுத்திட்டத்திற்கான அனைத்து நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்டுள்ளது.

ஆட்சி மாற்றத்தின் காரணமாகவே குறித்த வீட்டுத்திட்ட பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது.

சஜித் பிரேமதாச ஜனாதிபதி தேர்தலில் தோல்வி அடைந்ததன் காரணத்தினால் குறித்த வீட்டுத்திட்ட பணிகள் இடை நிறுத்தப்பட்டுள்ளது.எமது மக்கள் பல்வேறு துன்ப துயரங்களை சந்தித்து வருகின்றனர்.

வீட்டை கட்டி முடிக்க வேண்டும் என்பதற்காக பணத்தை வட்டிக்கு பெற்றுள்ளனர்.உடமைகளை அடகு வைத்துள்ளனர்.

-இவ்வாறான சூழலில் தற்காலிக வீடுகளையும் உடைத்துள்ள நிலையில் அந்த மக்கள் இன்றைக்கு தெருவில் நிற்கின்ற நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே புதிய பிரதமர் இந்த வீட்டுத்திட்டத்திற்கு பொறுப்பாக உள்ள சூழ் நிலையில் வீட்டுத்திட்டங்கள் சஜித் பிரேமதாசவினுடையது என ஒதுக்கி விடாமல் எமது மக்களின் வீட்டுத்திட்டங்களை பூரணப்படுத்த உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

அவசர கடிதம் ஒன்றை அனுப்ப உள்ளதோடு பாராளுமன்றத்திலும் இவ்விடையம் தொடர்பாக குரல் கொடுக்க உள்ளேன். வீட்டுத்திட்டத்தை முழுமையாக பெற்றுக்கொடுக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளுவோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

இதையும் படிங்க

கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொண்டார் மோடி!

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று (திங்கட்கிழமை) கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான தடுப்பூசியை பெற்றுக்கொண்டார். அத்துடன் தகுதியான அனைவரும் கொரோனா தடுப்பூசி...

கொரோனா பரவலுக்கு மத்தியில் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைகள் ஆரம்பம்!

கொரோனா பரவலுக்கு மத்தியில் 2020ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகள் இன்று (திங்கட்கிழமை) ஆரம்பமாகியுள்ளன. எதிர்வரும் 10 ஆம் திகதி வரை...

நாட்டின் சில பகுதிகள் இன்று காலை தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு!

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டிருந்த சில பகுதிகள் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 5 மணியுடன் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் மட்டக்களப்பு –...

ஐக்கிய இராச்சிய தமிழ்த்துறையை நிறுவ பேரழைப்பு!

இலண்டன் பல்கலைக்கழகம், SOAS இல் தமிழ்த்துறை அமைவதற்கு வலுசேர்க்கும் முயற்சியாக கிளி மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில் தொண்டு நிறுவனங்களும் ஐக்கிய இராச்சிய தமிழ்த்துறையும் சந்திக்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மெக்ஸிகோவில் அடையாளம் தெரியாத துப்பாக்கி தாரிகளின் துப்பாக்கிப் பிரயோகத்தில் 11 பேர் பலி

மெக்ஸிகோவின் மேற்கு மாநிலமான ஜாலிஸ்கோவில் லொறியொன்றில் சென்ற அடையாளம் தெரியாத துப்பாக்கி தாரிகள் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் இந்த சம்பவம்...

அ.தி.மு.க.கூட்டணியில் பா.ம.க இடையே தேர்தல் உடன்பாடு கைச்சாத்து!

அ. தி. மு. க கூட்டணியில் பா. ம. க விற்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கான அறிவிப்பை அ. தி. மு. க ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ. ...

தொடர்புச் செய்திகள்

பதவிகளில் இதுவரையில் எவ்வித மாற்றங்களும் இல்லை | தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் மற்றும் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் ஆகிய பதவிகளில் இதுவரையில் எவ்வித மாற்றங்களும் ஏற்படுத்தப்படவில்லை என அந்தக் கட்சி உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தமிழர்களுடைய பிரச்சினை பற்றி ஜனாதிபதி பேசா நிலையில் | இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே

இலங்கையில் தமிழ் மக்களின் தேசிய பிரச்சினைக்கு தீர்வொன்றினை காணும் பணியில் இந்தியாவின் பங்களிப்பு தொடர்ந்தும் இருக்கும் என இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார்.

எம்.ஏ.சுமந்திரன் கட்சியிலிருந்து நீக்குங்கள்|மிதுலை

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வீழ்ச்சிக்கும், பிளவுக்கும் ஒட்டுமொத்த காரணமாக உள்ள எம்.ஏ.சுமந்திரன் கட்சியில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்று தமிழரசு கட்சியின் கொழும்பு மாவட்டத்தின் உப தலைவி மிதுலைச்செல்வி ஸ்ரீபற்மனாதன்...

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

இலங்கை அணியின் தலைவராக அஞ்சலோ மத்தியூஸ்!

மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான இருபதுக்கு இருபது கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணியின் மேலதிக தலைவராக அஞ்சலோ மத்தியூஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை கிரிக்கட் சபையினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே...

ஜான்சன் மற்றும் ஜான்சன் நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசியை அவசர தேவைக்கு பயன்படுத்த அமெரிக்கா அனுமதி..!

வாஷிங்டன்: ஜான்சன் மற்றும் ஜான்சன் நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசியை அவசர தேவைக்கு பயன்படுத்த அமெரிக்கா அனுமதி அளித்துள்ளது. கொரோனாவுக்கு எதிராக ஒற்றை டோஸ் தடுப்பூசியை உருவாக்கி உள்னனர்.

சக்கரை நோயும் வாய் நலனும்!

சக்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் பேர் வாய் சம்பந்தமான பல பிரச்சினைகளுக்கு ஆளாகின்றனர். சர்க்கரை நோயால் வாயில் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து அறிந்து கொள்ளலாம். சக்கரை...

மேலும் பதிவுகள்

விஜய் ஹசாரே கிரிக்கெட் தொடரில் பிரித்வி ஷா இரட்டை சதம் அடித்து அசத்தல்!

இந்தியாவில் நடைபெற்றுவரும் விஜய் ஹசாரே கிரிக்கெட் தொடரில், மும்பை அணியின் வீரரான பிரித்வி ஷா இரட்டை சதம் அடித்து அசத்தியுள்ளார். புதுச்சேரி அணிக்கெதிரான போட்டியில், பிரித்வி...

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 28.02.2021

மேஷம்மேஷம்: உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்து கொள்வீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக்கொள்வீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய...

மேற்கிந்தியத் தீவுகளுக்கு தசூன் ஷானக்க பயணிக்காதது ஏன்? இலங்கை கிரிக்கெட் சபை விளக்கம்!

மேற்கிந்தியத் தீவுகளுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி வீரர்களுடன் சகலதுறை வீரரான தசூன் ஷானக்க, பயணிக்கவில்லை என இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. தசூன்...

தடுப்பூசிக்காக மூத்த குடிமக்கள் தற்போது இணையத்தில் விண்ணப்பிக்கலாம்!

கொரோனா தடுப்பூசியை இணையத்தில் விண்ணப்பிக்க வழிகாட்டு நெறிமுறைகளை மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய சுகாதார அமைச்சகம் அனுப்பிவைத்துள்ளது. மத்திய அரசின் சுகாதார அமைச்சகத்தின் இணையதளமான கோ-வின்...

ஈரான் கிளர்ச்சியாளர்கள் மீது அமெரிக்கா விமான தாக்குதல்!

வாஷிங்டன்: சிரியாவில் உள்ள ஈரான் கிளச்சியாளர்களின் ராணுவத் தளங்கள் மீது நேற்று அமெரிக்க போர் விமானங்கள் குண்டு வீசி தாக்குதல் நடத்தின. கடந்த பிப்ரவரி 15ம் தேதி வடக்கு ஈராக்கிலுள்ள...

தமிழக சட்டசபையில் இன்று இடைக்கால வரவு செலவுத் திட்டம் தாக்கல்!

தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் மாத இறுதியில் நடைபெறவுள்ள நிலையில், சட்டசபையில் இடைக்கால வரவு செலவுத் திட்டத்தை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்யவுள்ளார்.

பிந்திய செய்திகள்

கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொண்டார் மோடி!

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று (திங்கட்கிழமை) கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான தடுப்பூசியை பெற்றுக்கொண்டார். அத்துடன் தகுதியான அனைவரும் கொரோனா தடுப்பூசி...

கொரோனா பரவலுக்கு மத்தியில் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைகள் ஆரம்பம்!

கொரோனா பரவலுக்கு மத்தியில் 2020ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகள் இன்று (திங்கட்கிழமை) ஆரம்பமாகியுள்ளன. எதிர்வரும் 10 ஆம் திகதி வரை...

நாட்டின் சில பகுதிகள் இன்று காலை தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு!

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டிருந்த சில பகுதிகள் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 5 மணியுடன் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் மட்டக்களப்பு –...

கோட்டை மாரியம்மனுக்கு மஞ்சள் நீராட்டு, முளைப்பாரி ஊர்வலம்!

திண்டுக்கல் விஸ்வகர்ம மகாஜன சபா சார்பில் கோட்டை மாரியம்மனுக்கு மஞ்சள் நீராட்டு, முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. திண்டுக்கல் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவிலாக, திண்டுக்கல் கோட்டை...

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 01.03.2021

மேஷம்மேஷம்: எதிர்பாராத பணவரவு உண்டு. பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். அரசாங்கத்தாலும் அதிகாரப் பதவியில் இருப்பவர்களாலும் ஆதாயமடைவீர்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்தியோகத்தில் உயரதிகாரிகளும் மெச்சும்...

உயிர்க் கவிதை | கவிதை | சிவநாதன்

உயிர் உள்ள சொற்கள்தேடி உயிர் விட்டுக்கொண்டிருந்ததொருகவிதை மனவெளியில்எண்ணச்சருகுகள்அங்கங்கேசிதறிக் கிடைக்க தனிமைக் கதவின்தாழ்ப்பாள் திறந்துநினைவெனும்தாழ்வாரங்களில்நிலையில்லாது வழியும்ஞாபக...

துயர் பகிர்வு