ஐந்து மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டில் சீரற்ற காலநிலை தொடர்ந்து நிலவிவருவதால் முக்கியமாக ஐந்து மாவட்டங்களுக்கு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதன்படி, கொழும்பு, காலி, களுத்துறை, கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு இவ்வாறு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நாடு முழுவதும் தற்போது பெய்துவரும் மழையுடனான காலநிலை சிலநாட்களுக்கு தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கையொன்றில் குறிப்பிட்டுள்ளது.

அந்தவகையில், நாட்டின் சில பகுதிகளில் 150 மில்லிமீற்றருக்கும் அதிகளவான மழைவீழ்ச்சி பதிவாக வாய்ப்புள்ளதாக திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இதனிடையே, இந்தக் காலப்பகுதியில் காற்றின் வேகமானது மணிக்கு 50-60 கிலோமீற்றர் வேகத்தில் வீசக் கூடுமென தெரிவிக்கப்படுகிறது.

ஆசிரியர்