நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற இந்த சம்பவத்தில் தேக்கவத்தையைச் சேர்ந்த இராயேந்திரம் (வயது 65) என்பவரே உயிரிழந்துள்ளார்.
வவுனியா- பூம்புகாரிலில் இருந்து கண்டி வீதி வழியாக பயணித்த டிப்பர் ரக வாகனம், மணிக்குக்கூட்டுகோபுர சந்தியில் திருப்ப முற்ப்பட்ட வேளையில் எதிரே வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.
இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்தவரை படுகாயங்களுடன் வவுனியா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். ஆனாலும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா போக்குவரத்து பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது