செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை மன்னாரில் கரையொதுங்கும் X-Press Pearl கப்பலின் பிளாஸ்ரிக் பொருட்கள்!

மன்னாரில் கரையொதுங்கும் X-Press Pearl கப்பலின் பிளாஸ்ரிக் பொருட்கள்!

0 minutes read

இலங்கை கடற்பரப்பில் அண்மையில் தீப்பற்றிய கப்பலிலிருந்து வெளியேற்றப்பட்ட ஆபத்தான பொருட்கள் என சந்தேகிக்கப்படும் சில பொருட்கள் இன்று(வியாழக்கிழமை) காலை மன்னார் வங்காலை கடற்பரப்பில் கரையொதுங்கியுள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

வங்காலை பொலிஸ் நிலைத்திற்கு அருகிலுள்ள கடற்பரப்பிலேயே சிறிய பிளாஸ்ரிக் உருண்டைகள் என சந்தேகிக்கப்படும் பொருட்கள் கரை ஒதுங்கியுள்ளதாக மீனவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த சிறிய உருண்டைகள் கடற்கரையோரங்கள் முழுவதிலும் சிதரிக்கிடப்பதை அவதானிக்க கூடியதாக உள்ளதுடன், குறித்த பகுதிக்கு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை அதிகாரிகள் மற்றும் திணைக்கள அதிகாரிகள் நேரடியாக சென்று கரை ஒதுங்கியுள்ள பிளாஸ்ரிக் பொருட்கள் தொடர்பாக பார்வையிட்டு வருகின்றனர்.

மேலும் அரிப்பு பகுதியிலும் குறித்த பிளாஸ்ரிக் பொருட்கள் கரை ஒதுங்கியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.