செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை வியாழேந்திரன் வீட்டுக்குள் நுழைய முற்பட்டவர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழப்பு!

வியாழேந்திரன் வீட்டுக்குள் நுழைய முற்பட்டவர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழப்பு!

0 minutes read

மட்டக்களப்பு ஊறணியில் மன்றேசா வீதியில் உள்ள இராஜாங்க அமைச்சரின் வீட்டுற்கு முன்பாகவே இந்தச் சம்பவம் இன்று (திங்கட்கிழமை) மாலை இடம்பெற்றுள்ளது.

வியாழேந்திரனின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைய முற்பட்டபோது மெய்ப்பாதுகாவலரால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது படுகாயமடைந்த நபர் சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்குப் கொண்டு செல்லப்பட்ட போதிலும் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

வீட்டிற்குள் அத்துமீறி நுழைய முற்பட்டவர் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டதுடன் மெய்ப் பாதுகாவலரின் துப்பாக்கியையும் பறிக்க முயன்ற நிலையிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த இடத்திற்கு விரைந்த மட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் டி.ஜி.என்.விஜயசேன உட்பட பொலிஸ் குழுக்கள் இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றன.

இந்தச் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தை பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் உறுதிப்படுத்தியுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.