செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை யாழில் நிலக்சனின் 14ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு!

யாழில் நிலக்சனின் 14ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு!

0 minutes read

யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர் சகாதேவன் நிலக்சனின் 14ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றது.

யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற குறித்த நினைவேந்தல் நிகழ்வில், நிலக்சனின் உருவ படத்திற்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டதுடன் மலரஞ்சலி செலுத்தி, சுடரேற்றப்பட்டது.

யாழ்.பல்கலை கழக ஊடக வளங்கள் பயிற்சி மையத்தின் ஊடக கற்கை மாணவனும் சாரளம் சஞ்சிகையின் ஆசிரியரும் யாழ்.மாணவர் பேரவையின் முன்னாள் தலைவருமான சகாதேவன் நிலக்சன், கடந்த 2007ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 1ஆம் திகதி அவரது வீட்டில் இருந்த வேளையில், திடீரென அதிகாலை 5 மணியளவில் அங்கு சென்ற ஆயுதாரிகள், நிலக்சனை வெளியே அழைத்து அவரது பெற்றோர்கள் முன்னிலையில் சுட்டுப்படுகொலை செய்தமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.