செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை யாழில் இளம் பெண் உள்ளிட்ட இருவர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்பு!

யாழில் இளம் பெண் உள்ளிட்ட இருவர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்பு!

1 minutes read

பருத்தித்துறை- மந்திகை ஆதார வைத்தியசாலையில் வெளிநோயாளர் பிரிவில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த இளம் பெண் (22 வயது) உள்ளிட்ட இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பருத்தித்துறை சேர்ந்த குறித்த பெண், மூன்று நாள்களாக காய்ச்சலுடன் சுகயீனமாக இருந்த நிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை மூச்சு எடுப்பத்தில் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளார்.

இதனால் குறித்த பெண்ணை, மந்திகை வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவுக்கு அனுமதித்தபோது, மருத்துவ பரிசோதனையில் அவர் உயிரிழந்துவிட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து, அப்பெண்ணின் மாதிரிகளில் அதிவிரைவு அன்டிஜன் பரிசோதனை முன்னெடுத்தபோது, அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, வல்வெட்டித்துறையைச் சேர்ந்த பெண் ஒருவர் (69 வயது) மந்திகை வைத்தியசாலைக்கு அன்புலன்ஸில் அழைத்துவரப்பட்டு வெளிநோயாளர் பிரிவில் சேர்க்கப்பட்டார். எனினும் அவர் உயிரிழந்துள்ளார்.

இதன்போது, அவருக்கு முன்னெடுக்கப்பட்ட அதிவிரைவு அன்டிஜன் பரிசோதனையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அந்தவகையில் யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 233ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.