செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை வவுனியாவில் கடற்படை பேருந்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து!

வவுனியாவில் கடற்படை பேருந்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து!

0 minutes read

வவுனியாவில் கடற்படை பேருந்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து நேற்று (திங்கட்கிழமை) மாலை இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வவுனியாவில் இருந்து ஈரப்பெரியகுளம் நோக்கிச்சென்ற மோட்டார் சைக்கிள் ஈரப்பெரியகுளம் சந்திக்கருகில் மதவாச்சியில் இருந்து வவுனியா நோக்கி வந்த கடற்படை பேருந்துடன் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஈரப்பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய அனுஸ்க அபயரத்தின லக்மால் என்ற இளைஞரே சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஈரப்பெரியகுளம் பொலிஸ் பொறுப்பதிகாரி சுகந்தன் தலைமையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.