செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை வவுனியாவில் அதிக பனி மூட்டம் – சாரதிகள் அசௌகரியம்!

வவுனியாவில் அதிக பனி மூட்டம் – சாரதிகள் அசௌகரியம்!

0 minutes read

இன்று(வெள்ளிக்கிழமை) காலை அதிகளவான பனி மூட்டம் காணப்பட்ட நிலையில் சாரதிகள் வாகனங்களை செலுத்துவதில் பெரும் இடையூறுகளை சந்தித்திருந்தனர்.

வவுனியா நகர்ப்புறம் உட்பட அனைத்து இடங்களிலும் அதிகளவான பனி மூட்டம் காணப்பட்டது.

இதன்காரணமாக பாடசாலை மாணவர்கள், வேலைக்கு செல்வோர், வாகனச்சாரதிகள் எனப்பலரும் சிரமங்களை எதிர்கொண்டிருந்தனர்.

ஏ9 வீதி உட்பட வவுனியாவில் வீதியால் சென்ற வாகனங்கள் காலை 7.30 மணிவரை ஒளியைப் பாய்சியபடி சென்றதை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.

அண்மைக்காலமாக மழையுடன் கூடிய காலநிலை வவுனியாவில் காணப்பட்ட போதிலும் தற்போது அதிக பனி மூட்டமாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.