புதிய பிரதமர் பதவிக்காக பரிந்துரைக்கப்பட்ட பெயர்கள் இதுவரை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அனுப்பிவைக்கப்படவில்லையென முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
முன்னதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட பாராளுமன்றத்தில் சுயாதீனமான செயற்படும் 53 உறுப்பினர்களால் பிரதமர் பதவிக்கு நிமல் சிறிபால டி சில்வா, டலஸ் அழகப்பெரும, விஜயதாச ராஜபக்ஷ ஆகியோரது பெயர்களை பரிந்துரைத்துள்ளதாகவும் இது குறித்த விபரம் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகின.
இந்நிலையிலேயே புதிய பிரதமர் பதவிக்காக பரிந்துரைக்கப்பட்ட பெயர்கள் இதுவரை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அனுப்பிவைக்கப்படவில்லையென முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.