செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை இலங்கை ஜனாதிபதி எதிராக ஐநா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் அறிக்கை

இலங்கை ஜனாதிபதி எதிராக ஐநா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் அறிக்கை

0 minutes read

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரி யாஸ்மின் சுகா 43 பக்க அறிக்கையை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட்டிடம் சமர்ப்பித்துள்ளார்.

குறித்த அறிக்கை நேற்றைய தினம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் ஜனாதிபதிக்கு எதிராக பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இலங்கை ஜனாதிபதி ஒருவருக்கு எதிராக ஜெனிவா மனித உரிமைகள் ஆணையாளரிடம் சமர்ப்பிக்கப்பட்ட முதலாவது விசாரணை அறிக்கை இதுவாகும்.

18 முன்னாள் இராணுவ அதிகாரிகளை அரச நிர்வாகத்திற்கு நியமித்ததன் மூலம் அரச சேவையை இராணுவமயமாக்கியதாகவும் யாஸ்மின் சுகா ஜனாதிபதி மீது குற்றம் சுமத்தியுள்ளார் என அந்த செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.