செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை சிறப்பாக நடைபெற்ற எடின்பரோ மரதன் | பத்தாயிரம் பவுண்ஸிற்கு மேல் நிதி சேகரிப்பு | வைத்தியர் சத்தியமூர்த்தி சாதனை

சிறப்பாக நடைபெற்ற எடின்பரோ மரதன் | பத்தாயிரம் பவுண்ஸிற்கு மேல் நிதி சேகரிப்பு | வைத்தியர் சத்தியமூர்த்தி சாதனை

1 minutes read

எடின்பரோ மரதன் நிகழ்வில் வைத்தியர் சத்தியமூர்தத் பங்குபற்றி 10 ஆயிரம் பவுண்ட்களுக்கு மேலான நிதியை கிளி மக்கள் அமைப்பிற்கு சேகரித்துக் கொடுத்துள்ளார்.
கிளி மக்கள் அமைப்பினால் வடக்கு கிழக்கு மாகாணங்களில் முன்னெடுக்கும் கல்வி வளர்ச்சித் திட்டங்களுக்காக இந்த நிதி பயன்படுத்தப்படவுள்ளது.

கிளி மக்கள் அமைப்பு வடக்கு கிழக்கு மாகாணங்களின் கல்வி வளர்ச்சிக்காக நிதி சேகரிக்கும் நிகழ்வு ஒன்றை எதிர்வரும் ஜூலை மாதம் நடைபெறவுள்ள நிலையிலேயே எடின்பரோ மரதன் ஸ்கொட்லன்ட் நாட்டில் இன்று இடம்பெற்றது. இதில் வைத்தியர் சத்தியமூர்த்தி கலந்துகொண்டு 42 கிலோமீற்றர் மரன் ஓடி நிறைவு செய்துள்ளார்.

இதற்கு ஆதரவு வழங்கும் நோக்கில் கிளிநொச்சியில் அடையாள மரதன் ஓட்ட நிகழ்வு இன்று காலை இடம்பெற்றது. கிளிநொச்சியின் பரந்தன் சந்தியில் இருந்து கிளிநொச்சி வரை இடம்பெற்ற நிகழ்வில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

ஐக்கிய இராச்சிய ஸ்கொட்லாண்ட் நாட்டு நேரம் பத்து மணிக்கு இடம்பெற்ற நிகழ்வில் உலகமெற்கும் இருந்து சுமார் பத்தாயிரம் பேர் கலந்து கொண்டமை சிறப்பம்சமாகும். இதேவேளை 2 லட்சம் பார்வையாளர்கள் மரதன் ஓட்டத்தில் பங்கு பற்றியவர்களுக்கு ஆதரவு ஊக்குவிப்பு வழங்கினர்.

மருத்துவர் சத்தியமூர்த்தி உடன் பத்துக்கும் மேற்பட்ட தமிழர்களும் பங்கு பற்றினர். அத்துடன் பரந்தன் இந்து மகா வித்தியாலயம் மற்றும் கிளி இந்துக் கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவர் உதயனன் மணியம் அவர்களும் கலந்து கொண்டுள்ளார்.

கிளிநொச்சியில் அடையாள மரதன் ஓட்டம்

கிளி பீப்பிள் (KILI PEOPLE) பிரித்தானியாவின் எடின்புரோவில் தாயகத்தின் கல்வி வளர்ச்சிக்காக நடாத்தும் மரதன் நிகழ்வுக்கு ஆதரவாகவும், வலுச்சேர்க்கும் வகையிலும் இன்று கிளிநொச்சியில் சிறப்பாக முன்னேடுக்கப்பட்ட மரதன் நிகழ்வின் சில பகுதிகள்..

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.