செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை வடமாகாணத்திற்கு 138 வைத்திய அதிகாரிகள் புதிதாக நியமனம்

வடமாகாணத்திற்கு 138 வைத்திய அதிகாரிகள் புதிதாக நியமனம்

0 minutes read

வடமாகாணத்திற்கு 138 வைத்திய அதிகாரிகளுக்குப் புதிதாக நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அவர் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மத்திய சுகாதார அமைச்சினால் உள்ளக பயிற்சியை நிறைவுசெய்த வைத்திய அதிகாரிகளுக்குக் கடந்த மே மாதம் 30ஆம் திகதி முதல் நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இதில் வடமாகாணத்திற்கு 138 வைத்திய அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். இவர்களில் 132 வைத்திய அதிகாரிகள் இதுவரை தமது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்கள்.

இதில் யாழ்.மாவட்டத்திற்கு 23 வைத்திய அதிகாரிகளும், கிளிநொச்சி மாவட்டத்திற்கு 22 வைத்திய அதிகாரிகளும், வவுனியா மாவட்டத்திற்கு 22 வைத்திய அதிகாரிகளும், மன்னார் மாவட்டத்திற்கு 35 வைத்திய அதிகாரிகளும், முல்லைத்தீவு மாவட்டத்திற்கு 31 வைத்திய அதிகாரிகளும் கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்கள்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.