Tuesday, June 28, 2022

இதையும் படிங்க

இலங்கயை பலம்வாய்ந்த நாடுகள் ஆக்கிரமிக்கலாம் | விமல் எச்சரிக்கை

ஜனாதிபதியை பெயரளவிலான நிர்வாகியாக்கி சர்வ கட்சி அரசாங்கத்தின் ஊடாக பிரச்சினைகளுக்கு தீர்வுகாண சகல தரப்பினரும் ஒன்றிணைய வேண்டும். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நெருக்கடிகளின் அறிவிப்பாளரை போல் செயற்படுகிறார்.

தென்னாபிரிக்க இரவு விடுதியில் 22 இளைஞர்கள் மர்ம மரணம்

தென்னாபிரிக்காவிலுள்ள இரவு விடுதியொன்றில் மர்மமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது. ஈஸ்டர்ன் கேப் மாகாணத்தின் ஈஸ்ட் லண்டன்...

மோசடி செய்த மக்களின் பணத்தை நாட்டுக்காக அர்ப்பணிக்க வேண்டும் | சம்பிக்க

முழு நாட்டையும் ஒரு குடும்பம் நெருக்கடிக்குள்ளாக்கியுள்ளது. மோசடி செய்த மக்கள் பணத்தை ராஜபக்ஷர்கள் நாட்டுக்காக அர்ப்பணிக்க வேண்டும். ஜனாதிபதி...

ஜூலை இறுதிக்குள் பிரச்சினைகளுக்கு தீர்வு | அமைச்சர் ஹரின்

சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடல்கள் தொடர்பில் வெகுவிரைவில் நாட்டுக்கு வெளிப்படுத்தப்படும். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வேலைத்திட்டங்களின் ஊடாக...

இந்தியாவிடமிருந்து எரிபொருளை பெற முயற்சி | இந்திய அமைச்சருடன் தூதுவர் பேச்சுவார்த்தை

இலங்கையின் அவசர எரிபொருள் தேவைகள் குறித்து இந்தியாவிற்கான இலங்கை தூதுவர் மிலிந்தமொரகொட இந்தியாவின் பெட்ரோலிய விவகார அமைச்சர் ஹர்தீப் சிங் பூரியுடன் அவசர...

பேருந்துக் கட்டண திருத்தம் தொடர்பான அறிவிப்பு

ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் அமுல்படுத்தப்படவுள்ள பேருந்து கட்டண திருத்தம் தொடர்பிலான இறுதி தீர்மானம் செவ்வாய்கிழமை (28) அறிவிக்கப்படும்.

ஆசிரியர்

இலங்கைக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்

ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான சர்வதேச பிணையங்களுக்காக, 25% முதலீட்டை செய்துள்ள அமெரிக்க நிறுவனமொன்று, ஜூலை 25 ஆம் திகதியுடன் காலாவதியாகவுள்ள நிலையில் ஆரம்ப முதலீடு மற்றும் அதற்கான வட்டியை அறிவிடுவதற்காக இலங்கைக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளது.

நியூயோர்க் நீதிமன்றத்தில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

250 மில்லியன் டொலருக்கும் அதிக நிதி மற்றும் 7.3 மில்லியன் டொலர் வட்டி ஆகியவற்றை ஜூலை 25 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் செலுத்துவதற்கான உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சர்வதேச கடன்களை மீள செலுத்த முடியாது என இலங்கை ஏற்கனவே அறிவித்துள்ளது.

இந்த பின்புலத்தில், ஜூலை 25 ஆம் திகதி ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் பிணைமுறி காலாவதியாகவுள்ளது.

2012 ஆம் ஆண்டு அமெரிக்காவின் HSBC வங்கியுடன் அப்போதைய மத்திய வங்கியின் ஆளுநராக செயற்பட்ட அஜித் நிவாட் கப்ரால் ஏற்படுத்திக்கொண்ட உடன்படிக்கைக்கு அமைய, ஒரு பில்லியன் டொலருக்கான பிணைமுறி பெற்றுக்கொள்ளப்பட்டது.

அதில் 250.19 மில்லியன் டொலர் பிணையை தனிநபர் முதலீடாக, அமெரிக்காவின் ஹமில்ட்டன் ரிசர்வ் வங்கி (Hamilton Reserve Bank) என்ற வரையறுக்கப்பட்ட நிறுவனமொன்றிடம் பெற்றுக்கொள்ளப்பட்டது.

இந்த பிணையங்கள் காலாவதியாகும் போது 5.8 வீத வட்டி செலுத்தப்படும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது.

எதிர்வரும் ஜுலை மாதம் 25 ஆம் திகதி இந்த பிணையம் காலாவதியாகும் போது, முதலீட்டுக்காக 7.349 மில்லியன் டொலர் வட்டியை செலுத்த வேண்டியுள்ளது.

கடந்த பெப்ரவரி மாதம் பிணையை திருப்பிச்செலுத்தும்போது, கடனை திருப்பி செலுத்துவதற்கான இயலுமை காணப்படுவதாகவே இலங்கை அதிகாரிகள் கூறியதாகவும் அமெரிக்காவின் ஹமில்டன் ரிசர்வ் வங்கி தாக்கல் செய்துள்ள மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடனை திருப்பி செலுத்த முடியாமல் போனமைக்கு , ஆட்சி செய்யும் ராஜபக்ஸக்களும், அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகளின் செயற்பாடுகளுமே காரணம் என அமெரிக்க நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் தாக்கல் செய்துள்ள மனுவில் கீழ்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

“ராஜபக்ஸ குடும்பத்தவர்கள் பல வருடங்களாக ஊழல் மோசடி தொடர்பில் குற்றஞ்சாட்டப்படுவோர்.
அமெரிக்காவின் முன்னாள் இராஜதந்திரியும் புலனாய்வு ஊடகவியலாளருமான ஒருவரால் வௌியிடப்பட்ட தரவுகளுக்கு அமைய,
ராஜபக்ஸ குடும்பத்தினர் பல பில்லியன் டொலர் சொத்துகளை குவித்து, தளர்வான நிதி விதிகளுடன் துபாய்,
சீஷெல்ஸ் மற்றும் St.Martin தீவில் மறைத்து வைத்துள்ளனர்.
அமெரிக்காவின் தரவுகளுக்கு அமைய, பசில் ராஜபக்ஸ என்ற இரட்டை பிரஜாவுரிமை கொண்டவர்
அரசாங்கத்தில் பதவிகளை வகிப்பதற்கு முன்பிருந்தே Mr.10% என்ற பெயரிலேயே அழைக்கப்பட்டார்.
அனைத்து செயற்றிட்டங்களிலிருந்தும் 10% தரகுப் பணத்தைக் கோரும் வழக்கம் அவரிடம் காணப்பட்டமையாலேயே இவ்வாறு அழைக்கப்பட்டார்.”

இலங்கையினால் இந்த வழக்கில் இருந்து விடுபடுவதற்கு எவ்வித விடுபாட்டு உரிமையும் இல்லையென ஹமில்டன் ரிசர்வ் வங்கி தாக்கல் செய்துள்ள மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதையும் படிங்க

அவுஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர்களே வித்தியாசமாக திகழ்வார்கள்

இலங்கைக்கு எதிரான டெஸ்ட்தொடரில் அவுஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர்களே  இரு அணிகளிற்கும் இடையிலான வித்தியாசமாக திகழ்வார்கள் என அணியின் பயிற்றுவிப்பாளர் அன்ரூ மக்டொனால்ட் தெரிவித்துள்ளார். காலியில் இடம்பெறவுள்ள முதலாவது...

10 நாட்களுக்குள் 4000 கோடி ரூபா பணம் அச்சிடப்பட்டுள்ளது | திஸ்ஸ அத்தநாயக்க

மத்திய வங்கி கடந்த 10 நாட்களுக்குள் 4000 கோடி ரூபா பணத்தை அச்சிட்டுள்ளது. இவ்வாறு பணத்தை அச்சிடுவதால் நாட்டில் பணவீக்கம் மேலும் மேலும்...

ஜி 7 உச்சமாநாட்டில் இலங்கைக்கான இந்திய உதவிகள் குறித்து மோடி தெரிவிப்பு

ஜி7 உச்சிமாநாட்டில் இந்திய பிரதமர் இலங்கை எதிர்கொண்டுள் நெருக்கடி குறித்து குறிப்பிட்டுள்ளார். இந்தியா இலங்கையின் உணவுபாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.

இன்று மின்வெட்டு அமுலாகும் நேர அட்டவணை விபரம்

இன்று (28) செவ்வாய்க்கிழமை 03 மணித்தியாலங்களுக்கு  மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

யாழில் சிறுமி கடத்தல் விவகாரம் | இருவர் கைது

யாழ்ப்பாணத்தில் சிறுமி ஒருவர் கடத்தப்பட்டதாக உறவினர்களால் பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம் இரு இளைஞர்களை  கைது செய்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்ற 47 பேர் கைது

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்ற 47 பேர் இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறித்த 47 பேரும் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு...

தொடர்புச் செய்திகள்

நியூயோர்க் துப்பாக்கி சூட்டில் 10 பேர் பலி

அமெரிக்காவின் நியூயோர்க் நகரிலுள்ள பல்பொருள் அங்காடியொன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் Buffalo நகரிலுள்ள 18 வயதான இளைஞர் ஒருவர் கைது...

உலகின் தூங்காநகரத்தில் சுரங்கப்பாதை ரயில்கள் முதல் முறையாக பின்னிரவு சேவை நிறுத்தம் .

உலகின் தூங்காநகரம் என்றழைக்கப்படும் நியூயோர்க் நகரில், கடந்த 115 ஆண்டுகளாக, 24 மணிநேரமும் செயல்பட்டு வரும் சுரங்கப்பாதை ரயில்கள், முதல் முறையாக, தங்கள் பின்னிரவு சேவைகளை நிறுத்தியுள்ளன. தினமும், 90 லட்சம் பேர், பயணிக்கும்...

நியூயோர்க் நகரத்தை தனிமைபடுத்த தேவையில்லை என அமெரிக்க ஜனாதிபதி தெரிவிப்பு!

அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 25 ஆயிரத்தை கடந்துவிட்ட நிலையில், இதில் நியூயோர்க் நகரத்தில் மட்டும் 55 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் பரவலின் மையமாக நியூயோர்க் நகரம் இருப்பதால்,...

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

தங்கம் தானாக வந்து சேர

வெள்ளிக்கிழமை உங்களுடைய வீட்டில் எப்போதும் போல பூஜையை செய்யது முடித்து விடுங்கள். பூஜை அறையில் தீபம் எரிந்து கொண்டிருக்கும் போது ஒரு சிறிய தட்டில் மேலே ஒரு...

அரச உத்தியோகத்தர்கள் தொடர்ந்தும் வீட்டிலிருந்து பணியாற்றலாம்

அரச உத்தியோகத்தர்களை அலுவலகங்களுக்கு அழைப்பதை மட்டுப்படுத்தும் வகையில் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கை மறு அறிவித்தல் வரை நீடிக்கப்பட்டுள்ளது. சுற்றறிக்கையின்படி, அன்றாட பணிகளை இடையூறு இன்றி மேற்கொள்ள குறைந்தபட்ச...

ஜூன் 27-ஜூலை 3 வரை மின்வெட்டு விபரம்

இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு ஜூன் 27 ஆம் திகதி முதல் ஜூலை 3 ஆம் திகதி வரை நாளாந்தம் 3 மணித்தியாலங்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்த அனுமதி வழங்கியுள்ளது.

மேலும் பதிவுகள்

பெட்ரோல் ஏற்றிய கப்பல் தாமதமடையும் | எரிசக்தி அமைச்சர்

இன்று (24) நாட்டை வந்தடையவிருந்த பெட்ரோல் ஏற்றிய கப்பல் மேலும் தாமதமடையும் என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார். இது தொடர்பில் மன்னிப்பு கோருவதாகவும்...

தனுஷை பாராட்டிய இளையராஜா

தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரான இளையராஜா மூன்று தலைமுறையுடன் இணைந்து இசையமைத்துள்ளார். இதுவரை ஆயிரத்திற்கு மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்த இளையராஜா தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம்,...

வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து பிட்னஷ்

நிறைய இடத்தை அடைக்காத -ஒரு மேட், ஸ்விஸ் பால், ரெஸிஸ்டண்ட் பேண்ட் மற்றும் ஸ்கிப்பிங் ரோப் -போன்ற உடற்பயிற்சிக் கருவிகளை புதிதாக வாங்கிக் கொள்ளலாம்.

கையில் பணம் தங்க வேண்டும் இதை செய்யுங்கள்

வீட்டில் பணம் குறையாமல் இருக்க எப்போதும் பலவித ஊறுகாய்களை வைத்திருக்க வேண்டும். அதிலும் முக்கியமாக நெல்லிக்காய் ஊறுகாய் வைத்திருந்தால் மகாலட்சுமியின் அருளைப் பெற்றுத்தரும்.

கவிதையை வாழ்த்தாக்கிய கீர்த்தி சுரேஷ்

விஜய், கீர்த்தி சுரேஷ், vijay, keerthy sureshநடிகர் விஜய்யின் 48-வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் நலத்திட்ட உதவிகள் வழங்குவது போன்ற நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

தேவையான ஒத்துழைப்புகள் வழங்க தயார்| ஐரோப்பிய வலய நாடுகளின் தூதுவர்கள்

நெருக்கடியான நிலையில் இலங்கையை கைவிடாது, தேவையான ஒத்துழைப்புகள் வழங்கப்படும் என ஐரோப்பிய வலய நாடுகளின் தூதுவர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவை இன்று சந்தித்து தெரிவித்துள்ளனர். ஐரோப்பிய...

பிந்திய செய்திகள்

தண்ணீர் (அதிகமாக) பருகினால் `கண்ணீர்’

தாகத்தை தணிப்பதற்கும், உடலில் நீர்ச்சத்தை தக்கவைப்பதற்கும் தண்ணீர் அவசியமானது. உடலில் உள்ள ஒவ்வொரு செல்களுக்கும் தண்ணீர் தேவைப்படுகிறது. உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறவும்...

கருணை கிழங்கு பஜ்ஜி

தேவையான பொருட்கள் கருணை கிழங்கு - 250 கிராம் கடலை மாவு - 1...

தோஷம் போக்கும் 12 ராசிக்கான மரங்கள்

உங்கள் ராசி மற்றும் நட்சத்திரத்திற்குரிய மரங்களை பற்றி தெரிந்து கொள்வோம். மொத்தம் 27 நட்சத்திரங்களும், 12 ராசிகளும் உள்ளன. இதில் ஒவ்வொரு நட்சத்திரம்...

சிறுநீரகத்தை நாசமாக்கும் 5 உணவுகள்

சில நேரங்களில் தவறான உணவுகள், மருந்துகள் மற்றும் சுற்றுச்சூழல் நச்சுகள் சிறுநீரகத்தை பா திக்கும் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகிறார்கள்.

ஆண்கள் எந்த வயதில் தந்தையாவது நல்லது தெரியுமா

ஒரு குழந்தையைப் பெற்றெடுக்கும் போது தங்கள் வயது ஒரு பொருட்டல்ல என்றும், குழந்தையைப் பெற்ற தாய்க்கு மட்டுமே உயிரியல் கடிகாரம் முக்கியம் என்றும்...

முகத்தில் உள்ள மேடு பள்ளங்களை மறைக்க வேண்டுமா?

முகத்தில் உள்ள மேடு பள்ளங்களை எளிதில் மறைக்க.. பொதுவாக சிலருக்கு முகத்தில் குழிகள் மேடு பள்ளமாகவும் அதிகம் காணப்படும்....

துயர் பகிர்வு