திருகோணமலை – சீனக்குடா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சின்னம்பிள்ளை சேனை பகுதியில் ஆறு மாத சிசுவின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது.
சின்னம்பிள்ளை சேனை பகுதியில் துர்நாற்றம் வீசிய நிலையில், வீடொன்றினை சோதனையிட்ட போது பொதியொன்றில் சுற்றப்பட்ட நிலையில் சிசுவின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் சீனக்குடா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வணக்கம் இலண்டன் WHATSAPP CHANNELநாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள வணக்கம் இலண்டன் WhatsApp Channelஇல் இணையுங்கள். JOIN NOW