Friday, March 29, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை மட்டு ரிதிதென்னையில் கடன் பிரச்சனை காரணமாக தன்னை கடத்தி கட்டிவைத்தாக நாடகமாடிய விமானபடை வீரர்

மட்டு ரிதிதென்னையில் கடன் பிரச்சனை காரணமாக தன்னை கடத்தி கட்டிவைத்தாக நாடகமாடிய விமானபடை வீரர்

2 minutes read

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள ரிதிதென்னை பகுதியில் விடுமுறைக்கு வீடு சென்று திரும்பிய விமானபடைவீரர் ஒருவர் கடன் பிரச்சனை காரணமாக தன்னை தானே கடத்தி காட்டுபகுதியில்  கட்டிவைத்ததாகக் கூரி நாடகமாடியுள்ள சம்பவம் இன்று வியாழக்கிழமை (28) இடம்பெற்றுள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனா.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது, 

ரிதிதென்னைப் பகுதியில் இன்று வியாழக்கிழமை (28) காலையில் வீதிசோதனையில் ஈடுபட்ட பொலிசார் ரிதிதென்னை பொலிஸ் சோதனைச் சாவடியில் இருந்து சுமார் 500 மீற்றர் பிரதான வீதியிலுள்ள செங்கல்வாடி ஒன்றுக்கு அருகில், உள் ஆடையுடன் ஆண் ஒருவர் மரத்தில் கட்டப்பட்ட நிலையில் இருப்பதை கண்டு அங்கு சென்ற போது அவர் விமானப்படை வீரர் என தெரியவந்துள்ளதுடன் மரத்தில் “முரட்டு அரசியலுக்காக உதவும் கைக்கூலிகள் இப்படித்தான் கொல்லப்படுகின்றார்கள்” என வாசம் எழுதப்பட்டு தொங்கவிடப்பட்டுள்ளதை கண்டு அவரை உடனடியாக  மீட்டு வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்தனர்

இதனை தொடர்ந்து குறித்த விமானபடை வீரரிடம் பொலிசார் மேற்கொண்ட விசாரணையில் மட்டக்களப்பு விமானபடை முகாமில் கடமையாற்றும் வலப்பனை பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதுடைய ரத்தினசூரிய முதியன்சலாகே  என்ற விமானபடை வீரர் எனவும், அவர் படை முகாமில் இருந்து விடுமுறைக்காக வீடுசென்றவர் என்றும், சம்பவதினமான நேற்று புதன்கிழமை (27) காலை ஹட்டன் பஸ்நிலையத்தில் இருந்து மகியங்கனைக்கு செல்லும் பஸ்வண்டியில் பயணித்து மாலை 3.15 மகியங்கனைக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பின்னர் அங்கிருந்து பொலன்னறுவை பஸ்வண்டியில் பயணித்து மாலை 6.30 மணிக்கு செவினப்பிட்டி மட்டக்களப்பு சந்தியை சென்றடைந்துள்ள நிலையில் மட்டக்களப்பு செல்வதற்காக செவினப்பிட்டி சந்தியில் காத்திருந்தபோது மனைவியுடன் கையடக்க தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்தபோது பின்னால் தனியார் வாகனம் ஒன்றில் வந்த இனந்தெரியாதோரால்  தனது தலையில் தாக்கப்பட்டு தனது முகத்தை மூடிதாகவும், பின்னர் தன்னை அந்த வாகனத்தில் ஏற்றிகொண்டு சுமார் 2 மணித்தியால பயணத்தின் பின்னர் ரிதிதென்னை பொலிஸ் சோதனைச் சாவடியில் இருந்து சுமார் 500 மீற்றர் பிரதான வீதியிலுள்ள செங்கல் வாடி ஒன்றுக்கு அருகில் தனது ஆடைகளை களைந்து உள் ஆடையடன்  கால்களையும், கைகளையும் கயிற்றால் கட்டி மரத்துடன் கட்டப்பட்டதுடன் அந்த மரத்தில் முரட்டு அரசியலுக்காக உதவும் கைக்கூலிகள் இப்படித்தான் கொல்லப்படுகின்றார்கள் என வாசம் எழுதப்பட்டு தொங்கவிடப்பட்டுவிட்டு தப்பி சென்றுள்ளதாக தெரிவித்துள்ளார். 

இச் சம்பவத்தையடுத்து சம்பவ இடத்திற்கு சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் குமாரசிறி சென்று சம்பவம் தொடபான விசாரணையை மேற்கொண்டதுடன்  குறித்த விமானபடை வீரர் தனக்கு இப்படித்தான் நடந்ததாக தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து குறித்த  சம்பத்தில் படைவீரருக்கு எதுவிதமான அடிகாயங்கள் இல்லாததையடுத்து அவர் மேல் ஏற்பட்ட சந்தேகத்தினையடுத்து மீண்டும் குறித்த விமானபடைவீரரிடம் மேற்கொண்ட விசாரணையில் அவர் கையடக்க தொலைபேசியில் விளையாட்டு ஒன்றில் அதிகபணத்தை இழந்துள்ளதாகவும் முகாமில் சக படைவீரர்களிடம் கடனாக பணம்வாங்கி அந்த விளையாட்டில் இழந்ததையடுத்து கடனாளியாகியுள்ளார்.

எனவே இதற்கு தீர்வு காண்பதற்காக தான் செவினப்பிட்டி கடை ஒன்றில் பிரிஸ்டல் போட் அட்டை  மற்றும் மாக்கர் வாங்கதுடன் வேறு கடையில் கயிறு ஒன்றையும் வாங்கி கொண்டு ரிதிதென்னை பொலிஸ் சோதனைச்சாவடியை தாண்டி மட்டக்களப்பு பிரதான வீதியில் இறங்கி வீதியில் சனநடமாட்டம் அற்ற குறித்த பகுதிக்கு சென்று பிரிஸ்டல் போட்டில் குறித்த வாசகத்தை எழுதி தொங்கவிட்டுவிட்டு பின்னர் உடைகளை கழற்றிவிட்டு உள் ஆடையுடன் தன்னைதானே கயிற்றால் கட்டி கொண்டு இந்த நாடகமாடியுள்ளார் என பொலிசாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதையடுத்து அவரை கைது செய்வதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டுவருவதாக பொலிசார் தெரிவித்தனர். 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More