Tuesday, April 23, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை பொருளாதார நெருக்கடியால் இலங்கையில் விபச்சாரத்தில் ஈடுபடும் பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பு | ஏஎன்ஐ

பொருளாதார நெருக்கடியால் இலங்கையில் விபச்சாரத்தில் ஈடுபடும் பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பு | ஏஎன்ஐ

3 minutes read

மிகமோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இலங்கை ஆடைத்தொழிற்துறையில் வேலைவாய்ப்பை இழந்த பெண்கள் விபச்சாரத்திற்குள் தள்ளப்பட்டுள்ளதால் அதன் பெண்கள் தொடர்பில் இன்னுமொரு நெருக்கடியை எதிர்கொள்கின்றது என ஏஎன்ஐ செய்தி வெளியிட்டுள்ளது.

ஆடைத்தொழிற்துறையில் வேலைவாய்ப்பை இழந்த பெண்கள் வருமானத்திற்காக விபச்சாரத்திற்குள் நுழைகின்றனர் என ஏஎன்ஐ தெரிவித்துள்ளது.

22 மில்லியன் மக்களை கொண்ட இலங்கை முன்னர் ஒருபோதும் இல்லாத பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில் இலங்கை மக்கள் கடும் நெருக்கடியையும் பட்டினி அபாயத்தையும் எதிர்கொள்கின்றனர்.

தற்போதைய சூழ்நிலையால் உண்டான நெருக்கடி பல குடும்பங்களை வாழ்வின் விளிம்பிற்கு தள்ளியுள்ளது,பெருமளவு இலங்கையர்கள் தங்கள் குடும்பங்களை கவனிப்பதில் பெரும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர்,உணவையும் அத்தியாவசிப்பொருட்களையும் பெறுவதில் அவர்கள் நாளாந்த பிரச்சினைகளை அவர்கள் சந்திக்கின்றனர்.

இந்த மோசமான நிலைமை நாட்டில்  புதிய விபச்சாரவிடுதிகள் உருவாகும் நிலையை ஏற்படுத்தியுள்ளது,வாழ்வாதாரத்திற்காக பெண்கள் விபச்சாரத்தில் ஈடுபடவேண்டிய நிலையேற்பட்டுள்ளதால் கடந்த சில மாதங்களாக விபச்சாரம் 30 வீதமாக அதிகரித்துள்ளது என பாலியல் தொழிலாளர்களின் உரிமைக்காக குரல்கொடுக்கும் ஸ்டான்ட் ஒவ் மூவ்மென்ட் லங்கா தெரிவித்துள்ளது.

இந்த விபச்சார விடுதிகளில் சில ஸ்பாக்கள் போல இயங்குகின்றன.

தங்கள் குடும்பத்திற்கு மூன்றுவேளையும் உணவு வழங்குவதற்கு இதுவே ஒரே வழியாக உள்ளது என அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

ஆடைத்தொழிற்சாலைகளில் தொழில்புரிந்த பெண்கள் வேலையிலிருந்து நீக்கப்பட்ட பின்னர் பாலியல் தொழிலில் ஈடுபடுகின்றனர் என அசிலா தந்தெனிய ஏஎன்ஐக்கு தெரிவித்தார்.

தற்போதைய நெருக்கடியால் பல பெண்கள் விபச்சாரத்தில் ஈடுபடுவதை நாங்கள் அவதானித்துள்ளோம்இஅனேகமானவர்கள் ஆடைதொழிற்துறையை சேர்ந்தவர்கள் கொவிட் காரணமாக ஆடை தொழில்துறை பாதிக்கப்பட்டதுஇபலர் வேலை இழந்தனர் தற்போதைய நெருக்கடி வாழ்வாதாரத்திற்காக பாலியல்தொழிலில் ஈடுபடவேண்டிய நிலையை ஏற்படுத்தியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

21 வயது ரெஹான( பெயர்மாற்றப்பட்டுள்ளது) தனது நிலை குறித்து ஏஎன்ஐக்கு இவ்வாறு தெரிவித்தார். ஆடைத்தொழிற்சாலையில் தொழில்புரிந்த தான் எவ்வாறு பாலியல் தொழிலாளியாக மாறினேன் என்பதை அவர் விபரித்தார்.

ஏழு மாதங்களிற்கு முன்னர் தனது தொழிலை இழந்த அவர் பல மாத இயலாமையின் பின்னர் பாலியல்தொழிலாளியாக மாறியுள்ளார்.

கடந்த டிசம்பரில் ஆடைத்தொழிற்சாலையில் நான் எனது வேலையை இழந்தேன்இஅதன் பின்னர் நாளாந்த அடிப்படையில் இன்னொரு தொழில் புரிந்தேன்இஆட்கள் இல்லாத சந்தர்ப்பத்தில் நான் வேலைக்கு செல்வேன்இஆனால் தொடர்ச்சியாக வேலை இல்லாததன் காரணமாக என்னால் உரிய வருமானத்தை பெற முடியவில்;லை கிடைத்த வருமானமும் எனது குடும்பத்தை பராமரிக்க போதுமானதாகயில்லைஇ பின்னர் ஸ்பா உரிமையாளர் என்னை அணுகினார் தற்போதைய நெருக்கடியால் நான் பாலியல் தொழிலாளியாக மாற தீர்மானித்தேன்இ அவர் விடுத்தவேண்டுகோளை எனது மனம் ஏற்க மறுத்தது ஆனால் எனது குடும்பத்திற்கு பணம் தேவைப்பட்டது என அவர் தெரிவித்தார்.

பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களில் 41 வயது ரோசியும் ஒருவர் ( பெயர் மாற்றம்)

ஏழு வயது பிள்ளையின் தாயான அவர் விவகாரத்து பெற்றவர் தற்போது பிள்ளையின் கல்விக்கா இந்த தொழிலில் ஈடுபட்டுள்ளார்.

பொருளாதார நெருக்கடி காரணமாக வருமானம் போதுமானதாகயில்லைஇ எனது குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு பணம் போதுமானதாகயில்லைஇஇதன் காரணமாகவே நான் இதனை தெரிவுசெய்தேன்இநான் கடையொன்றை நடத்துகின்றேன் அதனை தொடர்ந்து நடத்துவதற்கு பணம் செலுத்தவேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

மாதாந்தம் 15000 முதல் 20000 வரை உழைத்த பெண்கள் தற்போது நாளாந்தம் அதே பணத்தை உழைக்;கின்றனர் இதுவும் அவர்கள் இந்த தொழிலை தெரிவு செய்வதற்கு ஒரு காரணம் ஆனால் அவர்கள் பல பிரச்சினைகளை எதிர்கொள்ளவேண்டியுள்ளது.

பல பாலியல்தொழிலாளர்கள் தங்கள் ஆண் சகாக்களுடன் வாழத்தொடங்கினார்கள் ஆனால் நெருக்கடியால் ஆண்கள் அவர்களை விட்டுவிட்டு சென்றுள்ளனர்இபலர் கர்ப்பிணிகளாக உள்ளனர் தற்போது இரண்டு பெண்கள் கர்ப்பிணிகளாக உள்ளனர் நாங்கள் அவர்களை பராமரிக்கவேண்டிய நிலையில் உள்ளோம் அரசாங்க தரப்பிலிருந்து எந்த உதவியும் இல்லை என எஸ்யுஎம்எல்லின் நிறைவேற்று பணிப்பாளர் தெரிவித்தார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More