இன்று (01) இரவு 10 மணிமுதல் அமுலுக்கு வரும் வகையில் ஒரு லீற்றர் ஓட்டோ டீசலின் விலை 10 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
அதற்கமைய, ஒரு லீற்றர் ஓட்டோ டீசலின் புதிய விலை 430 ரூபா என அறவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், ஏனைய எரிபொருள் வகைகளில் எவ்விதமான விலை மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் பெற்றோலிய கூட்டுத்தாபனம் மேலும் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, ஓட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 10 ரூபாவால் இன்று இரவு 10 மணிமுதல் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் குறைக்கவுள்ள நிலையில், லங்கா ஐ.ஓ.சி.யும் ஓட்டோ டீசலின் விலையை 10 ரூபாவால் குறைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.