செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை யாழில் பெற்றோலை பெற காத்திருந்த இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு

யாழில் பெற்றோலை பெற காத்திருந்த இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு

0 minutes read

யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்று புதன்கிழமை பெற்றோல் பெற காத்திருந்தவர் திடீரென மயங்கி சரிந்து உயிரிழந்துள்ளார்.

புன்னாலைக்கட்டுவன் பகுதியை சேர்ந்த சிவசோதிலிங்கம் சொரூபன் (வயது 38) என்பவரே உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் தனது மோட்டார் சைக்கிளுக்கான பெற்றோலை பெற்றுக்கொள்ள தனது QR குறியீட்டை காண்பித்த நிலையில் , மோட்டார் சைக்கிளுடன் மயங்கி சரிந்து விழுந்துள்ளார்.

அதனை அடுத்து அங்கிருந்தவர்கள் அவரை வைத்தியசாலையில் அனுமதித்த போதும், அவர் உயிரிழந்துள்ளார். ஆரம்ப கட்ட வைத்திய பரிசோதனைகளின் அடிப்படையில் உயிரிழப்புக்கு மாரடைப்பே காரணம் என அறிக்கையிடப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.