நடுத்தர மக்களை நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் மின்கட்டணம் |மின்பாவனையாளர் சங்கம்

மின்சார சட்டத்தின் 30ஆவது உறுப்புரைக்கு எதிராகவே மின்கட்டணம் திருத்தம் செய்யப்பட்டுள்ளது, இதற்கு எதிராக சட்டநடவடிக்கையினை முன்னெடுப்போம்.

நடுத்தர மக்களை நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் மின்கட்டணம் திருத்தம் செய்யப்பட்டுள்ளது என மின்பாவனையாளர் சங்கத்தின் செயலாளர் சஞ்ஜீவ தம்மிக தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள மின்பாவனையாளர் சங்கத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

நாட்டு மக்கள் பொருளாதார நெருக்கடியினை எதிர்க்கொண்டுள்ள பின்னணியில் மக்களை மேலும் நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் மின்கட்டணம் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

நடுத்தர மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் மின்கட்டணம் திருத்தம் செய்யப்படும் என இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டமை முற்றிலும் பொய்யானது.

மின்சார சட்டத்தின் 30ஆவது உறுப்புரைக்கு எதிராகவே மின்கட்டணம் திருத்தம் செய்யப்பட்டுள்ளமைக்கு எதிராக சட்ட நடவடிக்கையினை முன்னெடுக்க தீர்மானித்துள்ளோம்.

மின்சக்தி அமைச்சு,மின்சார சபை மற்றும் இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு ஆகிய தரப்பினருக்கு எதிராக சட்டநடவடிக்கை முன்னெடுக்கப்படும்.

வீட்டு மின்பாவனையாளர்ளுக்கான கட்டணம் நூறு சதவீதத்தை காட்டிலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.இலங்கை மின்சார சபையின் முறையற்ற நிர்வாகத்தின் சுமையை பொது மக்கள் மீது சுமத்துவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்காவிடினும் பரவாயில்லை மக்களை நெருக்கடிக்குள்ளாக்காமல் இருக்க வேண்டும்.

மின்சார சபை குறித்து அரசாங்கம் அதிக அவதானம் செலுத்த வேண்டும்.மின்சார சபையின் முறையற்ற முகாமைத்துவம் முழு நாட்டு மக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்றார்.

ஆசிரியர்