கொழும்பிலிருந்து பயணித்த தொடருந்தில் மோதி ஒருவர் பலி

கொழும்பிலிருந்து பதுளை நோக்கி சென்ற உடரட்ட மெனிக்கே தொடருந்தில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் ஹட்டன் – மல்லியப்பு பகுதியில் இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவரின் விபரம்
உயிரிழந்தவர் மஸ்கெலியா – சாமிமலை பகுதியை சேர்ந்தவர் என விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவரிடம் கடவுச்சீட்டு மாத்திரமே இருந்துள்ள நிலையில் அதனை வைத்தே அவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சடலம் ஹட்டனில் வைக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

ஆசிரியர்