மண்ணெண்ணெய் பெற்றுத் தரக்கோரி புத்தளம் | கற்பிட்டி மீணவர்கள் ஆர்ப்பாட்டம்

புத்தளம் கற்பிட்டி மீணவர்களால் இன்று (16) மண்ணெண்ணெய் பெற்றுத் தருமாறு கோரி கற்பிட்டி பாலக்குடா சந்தியில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

தமக்கான மண்ணெண்ணையைப் பெற்றுத் தருமாறுக்கோரி கோஷங்களை எழுப்பியவாறும் பதாதைகளை ஏந்தியவாறும் மீணவர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பலர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கடற்தொழிலுக்குச் செல்லமுடியாமல் தாமும் பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

படகுகளுக்கு மண்ணெண்ணை இல்லாமையினால் பல மாதங்களாக தொழிலுக்குச் செல்ல முடியாமல் இருப்பதாக அப்பகுதி மீணவர்கள் கவலைத் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் தாம் வாழ்க்கையை நடாத்திவருவதாகவும் அன்றாடம் கடல் தொழிலுக்குச் சென்றால் தான் தமது வாழ்க்கையை கொண்டு செல்ல முடியுமென அப்பகுதி மீணவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

எனவே தமக்குத் தேவையான மண்ணெண்ணையை உடனடியாக பெற்றுதருமாறு கோரி மீணவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

ஆசிரியர்