செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை ஜனாதிபதிக்கு ஜப்பான் பிரதமர் வாழ்த்து

ஜனாதிபதிக்கு ஜப்பான் பிரதமர் வாழ்த்து

1 minutes read

அரசியல் ஸ்திரத்தன்மை, சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகள் மற்றும் அனைத்து கடன் வழங்குநர்களுடனான கடன் மறுசீரமைப்பு செயன்முறைகள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமைத்துவத்தின் கீழ் விரைவாக முன்னேற்றமடையும் என்று தான் எதிர்பார்ப்பதாக ஜப்பான் பிரதமர் ஃபியூமியோ கிஷிடா தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு அனுப்பி வைத்துள்ள வாழ்த்து கடிதத்திலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

குறித்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலங்கையின் ஜனாதிபதியாக நீங்கள் பொறுப்பேற்றதற்கு எமது அரசாங்கம் மற்றும் ஜப்பான் மக்கள் சார்பாக எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

பல வருடங்களாக இலங்கையின் பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட்ட நீங்கள் இம்முறை ஜனாதிபதியாக பதவியேற்றுள்ளமை எனக்கு உற்சாகமளிக்கிறது. அரசியல் ஸ்திரத்தன்மை உறுதி செய்யப்படுவதையும், சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகள் மற்றும் அனைத்து கடன் வழங்குநர்களுடனான கடன் மறுசீரமைப்பு செயல்முறைகள் உங்கள் தலைமையின் கீழ் விரைவாக முன்னேற்றமடையும் என்று எதிர்பார்க்கிறேன்.

பொருளாதார மற்றும் நிர்வாக சீர்திருத்தத்தின் மூலம் இலங்கை அரசாங்கம் தற்போது நிலவும் நெருக்கடியை விரைவில் சமாளிக்கும் என்று நம்புகின்றேன். நமது இராஜதந்திர உறவுகள் ஸ்தாபிக்கப்பட்ட 70 வது ஆண்டு நிறைவையொட்டி, சுதந்திரமான மற்றும் திறந்த இந்தோ – பசிபிக் ஒன்றை உருவாக்குவதற்கான ஒத்துழைப்பு உட்பட, இரு நாடுகளுக்கும் இடையேயான நல்லுறவை மேலும் மேம்படுத்துவதற்கு உங்களுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன். ‘

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.