இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு நாளை ஞாயிற்றுக்கிழமை (28) மின்வெட்டு அமுல்படுத்துவது தொடர்பான அட்டவணையை வெளியிட்டுள்ளது.
அந்த வகையில், மு.ப. 10.30 முதல் இரவு 10.00 மணி வரை 2 கட்டங்களில் 3 மணி நேர மின்வெட்டை அமுல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, நாட்டை 27 வலயங்களாக (A,B,C,D,E,F,G,H,I,J,K,L | P,Q,R,S,T,U,V,W | M,N,O | X,Y,Z | CC) பிரித்து ஒவ்வொரு வலயத்திலும் உள்ள பிரதேசங்களில்,
ஓகஸ்ட் 28: 3 மணித்தியாலங்கள்
ABCDEFGHIJKL | PQRSTUVW :
– மு.ப. 10.30 – பி.ப. 6.00 இடையில் 1 மணித்தியாலம் 40 நிமிடங்கள்
– பி.ப. 6.00 – பி.ப. 10.00 இடையில் 1 மணித்தியாலம் 20 நிமிடங்கள்
MNO | XYZ | CC :
– மு.ப. 5.30 – மு.ப. 8.30 இடையில் 3 மணித்தியாலங்கள்
CC :
– மு.ப. 6.00 – மு.ப. 8.30 இடையில் 2½ மணித்தியாலங்கள்
மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
போதிய எரிபொருள் இன்மை காரணமாக இலங்கை மின்சார சபையினால் விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோளுக்கிணங்க இவ்வாறு திட்டமிட்ட மின்வெட்டுக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது.