செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை சுகாதார அணையாடைக்கு இறக்குமதி சலுகைகள்

சுகாதார அணையாடைக்கு இறக்குமதி சலுகைகள்

1 minutes read

பெண்கள் மற்றும் பாடசாலை மாணவிகள் மத்தியில் சுகாதாரத்தை உறுதி செய்தல் மற்றும் சுகாதாரப் பொருட்களை குறைந்த விலையில் பெற்றுக்கொடுத்தல் ஆகியவற்றுக்கு முக்கியத்துவமளிக்கும் வகையில், உள்நாட்டில் ஆரோக்கிய துவாய்களை தயாரிப்பதற்காக  (Sanitary Napkin) இறக்குமதி செய்யப்படும் பிரதான 05 மூலப்பொருட்களுக்கு விதிக்கப்பட்டிருந்த அனைத்து வரிகளையும் நீக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அதற்கமைய ஆரோக்கிய துவாய்களுக்கான 5 பிரதான மூலப்பொருட்களை இறக்குமதி செய்கின்றபோதும், இடைநிலைப் பொருட்களின் இறக்குமதியின்போதும் 15% சுங்க இறக்குமதி வரி, 10% -15% CESS வரி மற்றும் 10% PAL வரி (Ports & Airport Development Levy) ஆகிய வரிகள் நீக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, இறக்குமதி செய்யப்படும் சுகாதார அணையாடைகளுக்கு வரிச்சலுகையை வழங்கவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அரசாங்கத்தின் மேற்படி தீர்மானத்திற்கமைய உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் 10 சுகாதார அணையாடைகள் அடங்கிய ஒரு பக்கற்றின் விலை 50  தொடக்கம் 60 ரூபாவால் குறைவடையும்.

அதற்கமைய  அதன் உச்சபங சில்லறை விலை 260 தொடக்கம் 270 ரூபாவாக இருக்கும். அதேபோன்று, இறக்குமதி செய்யப்படும் ஆரோக்கிய துவாய்களின் சில்லறை விலைகளும் 18% அல்லது 19%  ஆல் குறைவடையும்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.