Friday, March 29, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை யாழில் போதை பொருளுடன் 3 பேர் கைது

யாழில் போதை பொருளுடன் 3 பேர் கைது

1 minutes read

நேற்றைய தினம் வியாழக்கிழமை யாழ்ப்பாணத்தில் போதைப்பொருட்களுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மற்றுமொரு நபர் பொலிசாரின் கைது நடவடிக்கையில் இருந்து தப்பி சென்றுள்ளார்.

சிறுப்பிட்டி கலையொளி பகுதியில் 99 மில்லி கிராம் ஹெரோயின் மற்றும் 1500 மில்லி கிராம் கஞ்சா ஆகிய போதைப்பொருட்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரையும் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

அதேவேளை யாழ்.நகரில் இருந்து தீவக பகுதிக்கு போதைப்பொருட்களை கடத்துபவர்கள் குறித்து ஊர்காவற்துறை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் பிரகாரம் , மண்கும்பான் பகுதியில் 20 வயதான இளைஞனை கைது செய்த பொலிஸார் அவரிடம் இருந்து 36 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளை மீட்டனர்.

குறித்த நபருடன் வருகை தந்திருந்த மற்றுமொரு இளைஞன் பொலிஸாரின் பிடியில் இருந்து தப்பி ஓடியுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More