செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை ரணிலுக்கு எந்தக் கவலையும் இல்லை! – ஹரின் கூறுகின்றார்

ரணிலுக்கு எந்தக் கவலையும் இல்லை! – ஹரின் கூறுகின்றார்

1 minutes read

“தேர்தல் பற்றியும் கட்சி பற்றியும் கவலைப்படாத ஒருவர் ரணில் விக்கிரமசிங்கதான்” – என்று சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.

‘இப்போதுள்ள அரசியல் தலைவர்கள் மக்களின் பிரச்சினையைச் சரியாகப் புரிந்து வைத்துள்ளார்களா?’ என்று எழுப்பிய கேள்விக்கு அவர் பதிலளிக்கும் போது,

“இல்லை. புரிந்து வைத்திருந்தால் இந்தக் கஷ்டமான காலத்தில் தேர்தல் ஒன்றைக் கேட்டு நிற்கமாட்டார்கள்.

மீண்டும் ஐக்கிய தேசிய கட்சி அரசு மலராது. நாட்டின் தற்போதையை நிலைமையின் கீழ் எந்தக் கட்சி தேர்தலில் வென்றாலும் அவர்களால் 113 ஐ பெற முடியாது.

மக்களின் பிரச்சினைகள் அப்படியே இருக்க இவர்கள் எல்லோரும் தேர்தலை நோக்கியே பயணிக்கின்றனர்.

எரிபொருள் உள்ளிட்ட பிரச்சினை ஓரளவு சரி வந்ததும் அதை வைத்துக்கொண்டு உடனே தேர்தலுக்குப் போவதற்கு முயற்சி செய்கின்றனர்.

எல்லோரும் தேர்தல் தேர்தல் என்றே நிற்கின்றனர். ஆனால், தேர்தல் பற்றியும் கட்சி பற்றியும் கவலைப்படாத ஒருவர் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கதான்” – என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.