June 8, 2023 6:57 am

வாயாடல்களால் நாடு முன்னேறாது! – சஜித் தெரிவிப்பு

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

வீம்பு பேசி நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது எனவும், சரியான குழுவுடனும் சரியான தொலைநோக்குடனும் நாட்டைக் கட்டியெழுப்பும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

‘பிரபஞ்சம்’ வேலைத்திட்டத்தின் கீழ் 56 ஆவது கட்டமாக ஐம்பது இலட்சம் ரூபா பெறுமதியான பாடசாலை பஸ் ஒன்று காலி உடுகம தேசியப் பாடசாலைக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவால் அன்பளிப்புச் செய்யப்பட்டது. இந்நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“நான் பஸ்ஸை ஓட்டுகின்றேனா? இல்லையா? என்பதைப் பார்த்து விமர்சிப்பதை விட, இந்த நடவடிக்கை பலனுள்ளதா? இல்லையா? என்பதை ஆராய்வது உகந்தது.

நாட்டின் கல்விக் கட்டமைப்பைக் கட்டியெழுப்புவதற்கு என்ன விமர்சனம் வந்தாலும் எம்மால் முன்னெடுக்கும் பணிகள் நிறுத்தப்படாது.

உலகில் ஏறக்குறைய சகல அபிவிருத்தியடைந்த நாடுகளும் நவீன கல்வி முறைகளைப் பரிசோதித்து வருகின்றன. கல்வியில் புதிய பாய்ச்சலின் ஊடாக ஒரு நாட்டைக் கட்டியெழுப்ப முடியும்.

பழைய போர்கள் மற்றும் பிரச்சினைகளுக்கு மத்தியில் இருந்த ருவண்டா நாடு தற்போது ஆப்பிரிக்காவின் சிங்கப்பூராக மாறியுள்ளது. கல்வியில் புதிய போக்குகள் மூலம் முன்னேறிய நாடுகள் பல உள்ளன” – என்றார்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்