தேர்தல்கள் ஆணைக்குழுவை மிரட்டி உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைக்க ரணில் அரசு முயற்சிக்கின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குற்றம் சாட்டினார்.
அரசின் இந்த மிரட்டலுக்குத் தேர்தல்கள் ஆணைக்குழு அடிபணிந்து போகக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
தேர்தலை நடத்தும் முழு அதிகாரமும் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு உண்டு என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் நீதிமன்றமும் சிறந்த தீர்ப்பை வழங்கும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் நம்பிக்கை வெளியிட்டார்.
தோல்விப் பயத்தாலேயே தேர்தலை ஒத்திவைக்க அரசு முயற்சிக்கின்றது என்றும் அவர் மேலும் கூறினார்.