October 4, 2023 5:15 pm

பொருட்கள் ஏற்றுமதி – இறக்குமதி தொடர்பில் கலந்துரையாடல்!

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

இந்தியாவிலிருந்து இலங்கைக்குப் பொருட்கள் கொண்டு வருவது தொடர்பில் கப்பல் நிறுவனத்துக்கும் யாழ்ப்பாணம் மாவட்ட வணிகர் கழகத்துக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று நடைபெற்றது.

யாழ். மாவட்ட வணிகர் கழகத்தின் தலைவர் ஆர். ஜெயசேகரன் தலைமையில் இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றது.

அதன் பின்னர் ஊடகவியலாளர் சந்திப்பு இடம் பெற்றது.

இது தொடர்பில்ல் அவர் கருத்துத் தெரிவிக்கையில்.

“காங்கேசன்துறையிலிருந்து காரைக்காலுக்கான இந்தக் கப்பல் சேவையில் பொருட்களை ஏற்றுமதி செய்தல் மற்றும் இறக்குமதி செய்தல் என்பன இடம்பெறவுள்ளன.

இந்நிலையில், என்னென்ன பொருட்களை ஏற்றுமதி செய்தல் என்னென்ன பொருட்களை இறக்குமதி செய்தல் என்பவை தொடர்பில் வர்த்தகர்களால் கலந்தாலோசிக்கப்பட்டது.

கப்பல் கம்பனியுடன் நடத்தப்பட்ட பேச்சுக்கு அமைவாக காங்கேசன்துறை துறைமுகத்தில் ஒரு கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

இந்தக் கலந்துரையாடலில் அமைச்சின் செயலாளர், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எனப் பலர் கலந்துகொண்டிருந்தனர்.

அதன் தொடர்ச்சியாகக் கலந்துரையாடல் ஒன்று யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள வணிகர் கழகத்தில் இடம்பெற்றது.

காங்கேசன்துறை துறைமுகத்துக்கு அண்மையில் உள்ள காரைக்கால் துறைமுகத்தின் ஊடாக இந்தப் பொருட்கள் ஏற்றுமதி – இறக்குமதி இடம்பெறவுள்ளது” – என்றார்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்