October 4, 2023 3:34 pm

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் விபரம் வெளியீடு!

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

எதிர்வரும் மார்ச் மாதம் 9ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஒவ்வொரு உள்ளூராட்சி சபைக்கும் போட்டியிடும் சுயேச்சைக் குழுக்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களின் பெயர்ப்பட்டியலை தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

இந்தப் பட்டியல் தேர்தல்கள் ஆணையகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

இதன்படி, வேட்பு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள வரிசையில் இடம்பெற்றுள்ள பெயர்ப்பட்டியல் அடங்கிய கியூஆர் குறியீடு இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தக் குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலம் தொடர்புடைய தகவல்களைப் பெற முடியும் என்று ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்