May 31, 2023 5:28 pm

ஏப்ரலில் தென்கொரியா பறக்கின்றார் மஹிந்த!

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டுப் பயணத் தடையை 10 நாட்களுக்கு கோட்டை நீதிவான் நீதிமன்றம் தற்காலிகமாக நீக்கியுள்ளது.

இன்று இந்த உத்தரவைப் பிறப்பித்த நீதிமன்றம், எதிர்வரும் ஏப்ரல் 20 முதல் 30 ஆம் திகதி வரையில், மஹிந்த ராஜபக்சவுக்கான வெளிநாட்டுப் பயணத் தடையை நீக்கியுள்ளது.

2022ஆம் ஆண்டு காலிமுகத்திடல் மைதானத்தில் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவைப் பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டபோதே கோட்டை நீதிவான் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

மாநாடொன்றில் கலந்துகொள்வதற்காக தனது சேவைபெறுநரான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தென்கொரியாவுக்குச் செல்ல வேண்டியிருப்பதால், வெளிநாட்டு பயணத் தடையை நீக்குமாறு அவரின் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்தக் கோரிக்கையைக் கருத்தில்கொண்ட கோட்டை நீதிவான் மஹிந்த ராஜபக்சவுக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டுப் பயணத் தடையை 10 நாட்களுக்கு நீக்கியுள்ளது.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்