செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை அரசியல் களம் விரைவில் அதிரும்! – ரோஹித எதிர்வுகூறல்

அரசியல் களம் விரைவில் அதிரும்! – ரோஹித எதிர்வுகூறல்

0 minutes read

“இலங்கையின் அரசியல் களத்தில் விரைவில் அதிரடிகள் காத்திருக்கின்றன. அவை என்னவென்று இப்போது எம்மால் சொல்ல முடியாது. அதிரடிகள் அரங்கேறிய பின்னர் அவற்றைத் தெரிந்துகொள்ளுங்கள்.”

– இவ்வாறு ராஜபக்சக்களின் முக்கிய சகாவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினருமான ரோஹித அபேகுணவர்த்தன தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

“எதிர்க்கட்சியில் இருந்து பலர் அரசுடன் இணையவுள்ளனர் என்று ஒரு தரப்பினர் கூறுகின்றனர். அதேவேளை, அரசிலிருந்து சிலர் எதிரணிப் பக்கம் வரவுள்ளனர் என்று மற்றொரு தரப்பினர் தெரிவிக்கின்றனர். ஆனால், உண்மையில் எந்தத் தரப்பில் ‘பல்டி’ இடம்பெறும் என்று பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும்.

நாம் அமைச்சுப் பதவிக்காக அலையவில்லை. தரமான அமைச்சுப் பதவி கிடைத்தால் அதனூடாக எமது சேவைகளை வழங்கத் தயாராக இருக்கின்றோம்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பலமான ஆளும் கட்சி. அது பிளவடையக்கூடாது என்பதுதான் எமது விருப்பம்.” – என்றார்.

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.