September 22, 2023 3:47 am

பொலிகண்டியில் 84 கிலோ கேரள கஞ்சா சிக்கியது!

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

யாழ்., வடமராட்சி, பொலிகண்டி கடற்கரையை அண்டிய பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 84 கிலோ கிராம் கேரள கஞ்சா இன்று கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது.

கடற்படையினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் பிரகாரம் அவ்விடத்துக்கு விரைந்த கடற்படையினர் கேரள கஞ்சாவை மீட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் எவரும் கைது செய்யப்படாத நிலையில், மேலதிக சட்ட நடவடிக்கைக்காகப் பொலிஸாரிடம் கஞ்சாவைக் கடற்படையினர் ஒப்படைத்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்