செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை வயோதிபப் பெண் வெட்டிக் கொலை!

வயோதிபப் பெண் வெட்டிக் கொலை!

1 minutes read

லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹோல்ட்றீம் தோட்டத்தில் 69 வயது மதிக்கத்தக்க தாய் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

தனி வீடு ஒன்றின் சமையலறையில் இருந்து வெட்டுக் காயங்களுடன் குறித்த தாய், சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்று லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் இன்று காலை 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவத்தில் சடலமாக மீட்க்கப்பட்டுள்ள தாய் அக்கரப்பத்தனை, சின்ன நாகவத்தை தோட்டத்தைச் சேர்ந்த வெங்கடாசலம் சத்தியபாமா (வயது 68) என்று அடையாளம் காணப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

அவர் சின்ன நாகவத்தை தோட்டத்திலிருந்து லிந்துலை, ஹோல்றீம் தோட்டத்தில் வசிக்கும் மருமகனின் வீட்டுக்குக் கடந்த ஞாயிற்றுகிழமை வந்திருந்தார் என்று தெரியவந்துள்ளது.

அவர் அணிந்திருந்த நகைகளும் மாயமாகியுள்ளதாகத் தெரிவித்த பொலிஸார், அவரைக் கொலை செய்ததன் பின்னர் நகைகளைக் கொள்ளையடித்து இருக்கலாம் என்றும் தெரிவித்தனர்.

மருமகன், மகள், பிள்ளைகள் இருவர் வசிக்கும் இந்த வீட்டில் சம்பவம் இடம்பெற்ற வேளையில் வீட்டில் தாய் தனியாக இருந்துள்ள நிலையில் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், தாயின் காது, கழுத்து மற்றும் மார்புப் பகுதிகளில் பாரிய வெட்டுக்காயங்கள் காணப்படுவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

ஹோல்றீம் தோட்ட பாடசாலையில் கல்வி கற்கும் அந்த வீட்டைச் சேர்ந்த சிறுமி, இன்று காலை தண்ணீர் குடிக்க வீட்டுக்கு வந்திருந்த வேளையில் வீட்டில் இரத்த வெள்ளத்துடன் தனது பாட்டி கிடந்ததை அவதானித்துக் கூச்சலிட்டுள்ளார்.

பின்னர் சம்பவ இடத்திற்குச் சென்ற அயலவர்கள் சம்பவத்தை அறிந்து லிந்துலை பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளனர்.

இதையடுத்து விரைந்த பொலிஸார், வெட்டுக் காயங்களுடன் அந்தத் தாய் சடலமாகக் கிடந்ததைக் கண்டு விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.