October 4, 2023 6:13 pm

ஹர்த்தாலுக்கு எதிராக ரணில் போர்க்கொடி!

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

“ஹர்த்தால் போராட்டம் மக்களின் நாளாந்த வாழ்வாதாரத்தை முடக்குகின்ற போராட்டமாகும். நாட்டின் பொருளாதாரத்துக்கும் பாரதூரமான தாக்கத்தை செலுத்துகின்ற போராட்டமாகும். ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்துள்ள தமிழ்க் கட்சிகள் இதைக் கவனத்திற்கொள்ள வேண்டும்.”

– இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:–

“மக்களை அடக்கி ஒடுக்கும் வகையில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட வரைவு கொண்டு வரப்படுகின்றதென தமிழ்க் கட்சிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளால் பரப்பப்படும் வதந்திகளை நாம் அடியோடு மறுக்கின்றோம்.

பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட வரைவு நாடாளுமன்றத்தில் முன் வைக்கப்பட்ட பின்னர்தான் அது தொடர்பான கருத்துக்களை வெளியிடமுடியும். சட்டவரைவில் திருத்தங்களையும் மேற்கொள்ள முடியும். அதைவிடுத்து அந்த சட்டவரைவுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்குவதும் ஹர்த்தால் நடத்துவதும் ஏற்றுக்கொள்ள முடியாதவை.

ஹர்த்தால் போராட்டம் மக்களின் நாளாந்த வாழ்வாதாரத்தை முடக்குகின்ற போராட்டமாகும். நாட்டின் பொருளாதாரத்துக்கும் பாரதூரமான தாக்கத்தை செலுத்துகின்ற போராட்டமாகும். ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்துள்ள தமிழ்க் கட்சிகள் இதைக் கவனத்திற்கொள்ளவேண்டும்” – என்றார்.

இதேவேளை ஹர்த்தாலை முன்னெடுப்பதற்கு மற்றொரு பிரதான காரணமாக வடக்கு – கிழக்கில் முன்னெடுக்கப்படும் பௌத்த – சிங்கள மயமாக்கலை தமிழ்க் கட்சிகள் குறிப்பிடுகின்றனவே என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் ஊடகவியலாளர்கள் கேட்டபோது,

“தமிழ்க் கட்சிகளின் இந்தக் கோரிக்கை தொடர்பில் உரிய கவனம் செலுத்துவோம். வடக்கு – கிழக்கில் சிங்கள – பௌத்த ஆக்கிரமிப்பு என்று சொல்லப்படுவது ஏற்றுக்கொள்ளமுடியாது” – என்றார்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்