செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை சஜித் மன்னிப்புக் கோருவார்! – வடிவேல் சுரேஷ் தெரிவிப்பு

சஜித் மன்னிப்புக் கோருவார்! – வடிவேல் சுரேஷ் தெரிவிப்பு

1 minutes read

“சஜித் பிரேமதாஸ விரைவில் பதுளை வருவதாக உறுதியளித்துள்ளார். அவ்வாறு வரும்போது அவர் மக்களிடம் மன்னிப்புக் கோருவார்” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.

பதுளை, மடுல்சீமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்துக்கு வருகை தருவதாக ஆரம்பத்தில் அறிவித்திருந்த ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ, இறுதி நேரத்தில் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

இதனால் வடிவேல் சுரேஷ் எம்.பி. கடுப்பானார். பதுளை, மடுல்சீமை மக்களிடம் சஜித் மன்னிப்புக் கோர வேண்டும் என்றும் வலியுறுத்தி வந்தார்.

இந்நிலையில் மே தின உரையின் போதும், “பதுளை, மடுல்சீமை மக்களிடம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மன்னிப்புக் கோர வேண்டும். அவ்வாறு இல்லையேல் ஐக்கிய மக்கள் சக்தியுடன் பயணத்தைத் தொடர்வதற்கு நான் தயாரில்லை” – என்று வடிவேல் சுரேஷ் எம்.பி. திட்டவட்டமாக அறிவித்திருந்தார்.

இதன்பின்னர் எதிர்க்கட்சித் தலைவரை அவர் நேற்று நேரில் சந்தித்துப் பேச்சு நடத்தினார். இது தொடர்பில் கருத்து வெளியிட்ட வடிவேல் சுரேஷ்,

“நடந்த சம்பவம் தொடர்பில் சஜித் பிரேமதாஸ கவலை வெளியிட்டார். விரைவில் பசறை, லுணுகலை, மடுல்சீமை பகுதிகளுக்கு அவர் வருவார். மக்களுடன் கலந்துரையாடுவார். அதன்போது மக்களிடம் அவர் மன்னிப்புக் கோருவார். நான் எனது மக்களின் பிரதிபலிப்பையே வெளிப்படுத்தினேன்.” – என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.