செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை ஜனாதிபதித் தேர்தலை முன்கூட்டியே நடத்த எதிரணி முழு ஆதரவு!

ஜனாதிபதித் தேர்தலை முன்கூட்டியே நடத்த எதிரணி முழு ஆதரவு!

0 minutes read

ஜனாதிபதித் தேர்தலை முன்கூட்டியே நடத்துவதற்கான யோசனையை அரசு முன்வைத்தால் அதற்கு முழுமையான ஆதரவு வழங்கப்படும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

இதற்காக விசேட சட்ட திருத்தம் தேவையெனில் அதற்கான நகர்வுக்கும் முழுமையான ஆதரவு வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.

எதிர்க்கட்சிகளுக்கிடையிலான கூட்டமொன்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் நடைபெற்றது.

மேற்படி சந்திப்பின் போது இது தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்பட்டது என்றும் சஜித் பிரேமதாஸ குறிப்பிட்டார்.

ஜனாதிபதித் தேர்தல் சவாலை எதிர்கொள்வதற்குத் தாம் தயார் எனவும், அரசு தயாரெனில் அது தொடர்பில் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் எனவும் சஜித் சவால் விடுத்தார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.