செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை ஜீப் மோதி தந்தை, மகன் பரிதாப மரணம்!

ஜீப் மோதி தந்தை, மகன் பரிதாப மரணம்!

0 minutes read

கண்டியில் இடம்பெற்ற வாகன விபத்தில் தந்தை, மகனும் உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் பயணித்த ஜீப் ரக வாகனத்தில் மோதுண்டு இருவரும் உயிரிழந்துள்ளனர் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.

பூவெலிக்கடை – சங்கமித்த மாவத்தையைச் சேர்ந்த சந்திரிக சம்பத் ரொட்ரிகோ (வயது 41) என்ற தந்தையும், விமந்த ரொட்ரிகோ (வயது 10) என்ற அவரது மகனுமே விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.

தேவையொன்றுக்காக தந்தை மற்றும் மகன் இருவரும் வீதியைக் கடக்கும் போது இவ்விபத்து நேர்ந்துள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது.

விபத்து தொடர்பில் மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளின் பின்னர் அவர் கண்டி நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.