September 22, 2023 6:13 am

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மகளிர் அணித் தலைவி கைது!

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வடமராட்சி கிழக்கு மகளிர் அணித் தலைவி ஜெகதீஸ்வரன் சற்குணதேவி இன்று காலை மருதங்கேணி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

காரணம் கூறாமலேயே பொலிஸார் அவரைக் கைது செய்து வாகனத்தில் ஏற்றிச் சென்றனர் எனவும், அவர் தற்போது மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் எனவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

சற்குணதேவியின் வீட்டுக்கு நேற்றிரவு சென்ற இனந்தெரியாத நபர்கள் அவரை அச்சுறுத்தினர் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராஜா கஜேந்திரன் தகவல் வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்