செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை மூன்று நாள் விஜயமாக யாழ். வருகின்றார் மைத்திரி!

மூன்று நாள் விஜயமாக யாழ். வருகின்றார் மைத்திரி!

0 minutes read

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு மூன்று நாள் விஜயம் மேற்கொள்கின்றார்.

நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் அழைப்பின் பெயரில் அவர் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்கின்றார்.

இவர் ஜூன் 29 முதல் ஜூலை 1 வரை யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து பல்வேறு பொது நிகழ்வுகளிலும், சந்திப்புக்களிலும் ஈடுபடவுள்ளார்.

இந்த விஜயத்தின் போது காணி விடுவிப்பு, கடற்றொழிலாளர்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சனைகள், விவசாயிகள் எதிர்கொண்டுள்ள பிரச்சனைகள், தமிழ் மக்களது நீண்டகால மற்றும் சமகால பிரச்சினைகள் சார்ந்து பலதரப்பட்ட சந்திப்புக்களிலும் அவர் பங்கெடுக்கவுள்ளார்.

அவற்றோடு, சர்வமத வழிபாடுகளிலும் கலந்துகொள்ளும் மைத்திரிபால சிறிசேன, மதத் தலைவர்களைச் சந்திக்கவுள்ளதுடன் சமூகமட்ட நிகழ்வுகளிலும் கலந்துகொள்ளவுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.